உ.வே.சா.வின் உண்மையான பதிப்புகள்

கடந்த மூன்று வாரங்களாக வெளிவந்த உ.வே.சா.பதிப்புகள் - பகுதியில் இடம்பெற்ற நூல்களின் பட்டியலும் அவை எந்த நூலிலிருந்து தரப்பட்டவை என்பதும் கொடுக்கப்பட்டிருந்தது.
Updated on
2 min read

கடந்த மூன்று வாரங்களாக வெளிவந்த உ.வே.சா.பதிப்புகள் - பகுதியில் இடம்பெற்ற நூல்களின் பட்டியலும் அவை எந்த நூலிலிருந்து தரப்பட்டவை என்பதும் கொடுக்கப்பட்டிருந்தது. இப்பட்டியலில் இடம்பெற்ற "உ.வே.சாமிநாதையரின் தமிழ்ப் பணிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தேசிய கருத்தரங்கம்' தொகுதி 1-இல் இடம்பெற்ற "உ.வே.சா.வின் தமிழ்ப் பதிப்புகள்' என்ற தலைப்பில் பேரா. மு. இரவி என்பவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்ற சில நூல்களின் பெயர்களும் பதிப்பு ஆண்டுகளும் பிழையாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அவற்றின் உண்மையான பதிப்பு ஆண்டுகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

(வ.எ.) (8)

காப்பியத்தில் இடம்பெற வேண்டிய பெருங்கதை மூலம் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது. வெளியான ஆண்டு 1935. இதோடு தொடர்புடைய இலாவாண காண்டம்(1935) பட்டியலில் காணப்படவில்லை.

(29)

நன்னூல் மயிலைநாதர் உரை 1918-இல் முதல் பதிப்பாகவும் சங்கர நமச்சிவாயர் உரை 1925லும் வெளிவந்துள்ளது.

(35)

திருத்தணிகைத் திருவிருத்தம் வெளிவந்த ஆண்டு 1914. இது "செந்தமிழ்' பிரசுரத்தின் 26ஆவது வெளியீடு.

(36)

திருக்கழுகுன்றச் சிலேடை வெண்பா 1933-இல் முதல் பதிப்பாகவும் 1939-இல் இரண்டாம் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது. பட்டியலில் 1937 என உள்ளது.

(39)

திருக்காளத்தி இட்டகாமிய மாலை என்பது காவிய மாலை என உள்ளது.

(41)

திருமயிலைத் திரிபந்தாதி வெளிவந்த ஆண்டு 1888 (கும்பகோணம் லார்ட் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டது).

(44)

"மதுரை மும்மணிக் கோவை' என்பதே நூலின் சரியான தலைப்பு.

(48)

களக்காட்டுச் சத்திய வாசகர் இரட்டைமணிமாலை என்பதே நூலின் சரியான தலைப்பு.

(57)

தேவையுலா 1907-இல் முதல் பதிப்பைக் கண்டது. 1925 என்பது பிழை. இது இரண்டாம் பதிப்பு. 1907-இல் வெளிவந்த இந்நூலின் முகப்பு அட்டையில் 1911 என ஆண்டு தவறாக அச்சிடப்பட்டிருக்கும் என்பது பலரும் அறியாத செய்தி. உ.வே.சா.இது குறித்து எழுதியுள்ளார்.

(66)

"பத்மகிரிநாதர் சென்றல்விடு தூது' என்பதே நூலின் சரியான தலைப்பு. இது கலைமகளில் ஐயரின் முதல் வெளியீடாக வந்தது. (இது நாளிதழ் பதிப்பில் ஏற்பட்ட பிழை)

(76)

திருமயிலைக் கபாலீசுவரர் பஞ்சரத்தினம் 1932-இல் கலைமகளில் வெளிவந்தது.

(81)

உதயணன் சரித்திரச் சுருக்கம் (1924) என்பதே நூலின் சரியான தலைப்பு.

(87,96)

திருநீலகண்ட நாயனார் சரித்திரமும் இயற்பகை நாயனார் சரித்திரமும் சேர்ந்து ஒரே நூலாக கல்யாணசுந்தர ஐயரால் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு 1944.

(இவை கலைமகளில் தொடராக வெளிவந்தவை). 1936 எனத் தவறாக உள்ளது.

(97)

செவ்வை சூடுவார் பாகவதம் முதல் பாகம் 1949-ஆம் ஆண்டும், இரண்டாம் பாகம் 1953-ஆம் ஆண்டும் வெளிவந்தன.

(98,99)

நினைவு மஞ்சரி முதல் பாகம் 1940-ஆம் ஆண்டும், இரண்டாம் பாகம் 1942-ஆம் ஆண்டும் வெளிவந்தன.

(100)

வித்துவான் தியாகராச செட்டியார் வெளிவந்த ஆண்டு 1942.

உ.வே.சா.வின் புதியதும் பழையதும் (1936), சிலப்பதிகாரம் அரும்பதவுரை(1892) முதலியன நூல் பட்டியலிலேயே காணப்படவில்லை.

உ.வே.சா. பதிப்பித்த நூல்களின் எண்ணிக்கை மொத்தம் 106.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com