நீதிநெறி விளக்கம்: கருமமே கண்ணாயினார்

மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்; கண்துஞ்சார்;எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்விஅருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்;கருமமே கண்ணாயி னார். (பாடல்-52)
நீதிநெறி விளக்கம்: கருமமே கண்ணாயினார்
Published on
Updated on
1 min read

மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்; கண்துஞ்சார்;

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி

அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்;

கருமமே கண்ணாயி னார்.(பாடல்-52)

தாம் மேற்கொண்ட ஒரு செயலைச் செய்து முடிப்பதிலே ஊக்கமுடையவர்கள், தாம் அடையும் உடல் துன்பத்தைக் கருதார்; பசியை மதியார்; அச்செயலையே இடைவிடாது நினைத்துக் கொண்டிருப்பதால் கண் உறக்கமும் கொள்ளார்; பிறர் செய்யும் தீமையையும் பொருட்படுத்தமாட்டார்; காலத்தின் அருமையையும் எண்ணமாட்டார்; பிறர் தம்மை அவமதித்தலையும் சிறிதும் மனத்தில் கொள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com