சொல் புதிது - 11

ஆடிமாதம், ஆற்றில் நீர் வரத்தொடங்கியதும் இரவு நேரத்தில் ஒரு குருவியின் சோகக் குரல் கிராமத்தில் இப்போதும் கேட்கிறது.
Updated on
2 min read

ஆடிமாதம், ஆற்றில் நீர் வரத்தொடங்கியதும் இரவு நேரத்தில் ஒரு குருவியின் சோகக் குரல் கிராமத்தில் இப்போதும் கேட்கிறது. அதற்கு "அக்கா குருவி' என்று பெயர். ஆற்று நீரில் அக்கா குருவியும் தங்கைக் குருவியும் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனவாம்; வெள்ளப் பெருக்கில் அக்கா குருவி அடித்துச் செல்லப்பட்டதாம்; தங்கைக் குருவி ஆற்றில் நீர் வரத் தொடங்கியதும் இரவில் சோகக் குரலில் அக்கா குருவியைக் கூப்பிடுகிறதாம்.

கிராமத்து வயல்வெளியில் இரவு நேரத்தில் நடந்து போனால், இப்போதும் ஒரு குருவி உங்கள் தலைக்கு மேலே ஒலி எழுப்பிக் கொண்டே வட்டமடிக்கும்; இதற்கு ஆள்காட்டிக் குருவி என்று பெயர்.

பிறந்த குழந்தை, பூமிக்கு வந்ததை அழுகை மூலம் அறிவிக்கிறது; பூனையைப் பார்த்ததும் அணிலும் காகமும் ஒலி எழுப்பித் தெரிவிக்கின்றன. காட்டில் சிங்கம் அல்லது புலியைப் பார்த்ததும் குரங்குகள் மரக்கிளைகளில் தாவித்தாவிப் பயக்குரல் எழுப்பி மற்ற விலங்குகளைக் கவனப்படுத்துகின்றன. இப்படி ஒலிகளுக்கும் விளைபயன் இருக்கிறது.

பஜ்ண்ற்ற்ங்ழ், பறவையின் கீச்சொலி; மலைப்பகுதியில் உள்ள நீலநிறப் பறவையே அதன் இலச்சினை. 2006 மார்ச் மாதம் நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த

ஒஹஸ்ரீந் ஈர்ழ்ள்ங்ஹ் எனும் மாணவரின் மனத்தில் தோன்றிய எண்ணம் 2006 ஜூலையில் நடைமுறைக்கு வந்துள்ளது. இப்போது 500 கோடி மக்களின் தகவல் தொடர்பாகி இருக்கிறது. மக்கள் தங்களது விருப்பு வெறுப்புகளை நேரடியாகத் தெரிவிக்கும் ஊடகமாகி இருக்கிறது.

என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லும் இடமாக முன்பு இருந்தது; இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக மாறி இருக்கிறது.

அரசியல் நிகழ்வுகளைச் சுட்டி எதிர்ப்புகளின் குரலாகப் பதிவாகத் தொடங்கியபோது, எகிப்து மற்றும் ஈரான் அரசுகள் தடுக்க முயன்றன. தீவிரவாதிகளின் தகவல் தொடர்பிற்குப் பயன்பட முடியாமல் தணிக்கை முறையும் வந்திருக்கிறது. தனிமனித விளம்பரத்திற்கும் செல்வாக்கிற்கும் வணிக முயற்சிக்கும் அவதூறுக்கும் வதந்திகளுக்கும் பயன்படாமல் தடுக்கவும் ட்விட்டர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

ட்விட்டர், வானொலி, தொலைக்காட்சிகளைவிட விரைவாகத் தகவல் தொடர்பில் முன்னணியில் இருக்கிறது. நிலநடுக்கம், சுனாமி, புயல் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் ட்விட்டர் செய்திகள் மக்களுக்கு மிகவும் உதவுகின்றன.

திருக்குறள் போல, சுருக்கமாகவும் மனத்தில் தைக்கிற மாதிரியும் ட்விட்டர் செய்திகள் 140 எழுத்துகளின் கொள்ளளவுக்குள் மனத்தில் விதைக்கப்படுகின்றன. இது இணையதளத்தின் குறுஞ்செய்தியாக இருக்கிறது. ஏற்கவும் மறுக்கவும் இடம் தருகிறது. ஏழு வயதாகியிருக்கும் இந்த ட்விட்டர் என்பதைத் தமிழில் இப்படிச் சொல்லலாம் என்கிறார்கள் வாசகர்கள்:

கு. கோப்பெருந்தேவி - கீச்சொலி

அ. கருப்பையா - இதமான ஒலி / கவனமாகச் செய்தி கூறல்

எழில். சோம பொன்னுசாமி - உரத்தொலிப்பான் / கருத்தொலிப்பான்

சோலை. கருப்பையா - கலகலப்பான குரல் / உற்சாக ஒலி / மகிழ்ச்சி ஆரவாரம்

சி. இராமச்சந்திரன் - இணையக் கீற்று / வலைக்கீற்று / வலைமொழிப் பதிவு

முனைவர் பா. ஜம்புலிங்கம் - குறுஞ்செய்திப் பகிர்விப்பான் / பகர்பகிர்வி / பறவைக் குரலி / பறவை ஒலி

செ. நாராயணசாமி - கிளரும் கீச்செல் செய்தி / கிளரும் குகூ குறுஞ்செய்தி

ப.இரா. இராசஅம்சன் - குறுஞ்செய்தி / கிளர்ச்சிநிலை / மெல்லொலி / மெல்லோசை

கோ. மன்றவாணன் - வலைக்கூவல் / புள்ளொலி / கீச்சொலி / சேதிக்கிளி / சேதிக்குயில்

முனைவர் ச.கீதாதேவி - சேதிப்புறா

கா.மு. சிதம்பரம் - வலைத்தளக் குறுஞ்செய்தி / ஆலுவம்

ட்விட்டர், எதேனும் ஒன்றைச் சுட்டித் தன் எண்ணத்தைப் பதிவதற்கும் பகிர்வதற்கும் பயன்படுகிறது. கட்டுரை போல் இல்லாமல் சுருக்கமாக இருக்கிறது.

சுட்டெழுத்து, சுட்டுச்சொல், சுட்டுப்பெயர், சுட்டுப்பொருள், சுட்டுவிரல் என்பதைப் போல் சுட்டுரை என்றால், சுருக்கமும் சுட்டிக் கூறுதலும் மனத்தில் பதியும் வகையில் கூறுதலும் அடங்கும். சுட்டுதல் என்பதற்கு "நன்கு மதித்தல்' என்றும் பொருள் இருக்கிறது. எனவே, ட்விட்டர் என்பதைத் தமிழில் சுட்டுரை என்று சொல்லலாம். "அவர் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்' என்று பெயர்ச் சொல்லாகவும், "அவர் சுட்டுரைத்துள்ளார்' என்று வினைச்சொல்லாகவும் பயன்படக்கூடும். மேலும் கட்டுரை போல இந்தச் சுட்டுரையும் வழக்கில் வரும் வாய்ப்பிருக்கிறது.

Twitter சுட்டுரை

அடுத்த வாரத் தேடல் -  Chat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com