சொல் புதிது - 8

எதற்கும் ள்ர்ன்ழ்ஸ்ரீங் கேட்கிறார்கள்; சொல்லவேண்டி இருக்கிறது. வீடு வாங்கினால், வங்கியில் பணம் போட்டால் ஆதாரம் சொல்ல வேண்டி இருக்கிறது.
Updated on
2 min read

எதற்கும் ள்ர்ன்ழ்ஸ்ரீங் கேட்கிறார்கள்; சொல்லவேண்டி இருக்கிறது. வீடு வாங்கினால், வங்கியில் பணம் போட்டால் ஆதாரம் சொல்ல வேண்டி இருக்கிறது. சொல்வதற்கு ஆதாரம் வேண்டும். சொல்லுக்குப் பொருள் சொல்லவும் ஆதாரம் வேண்டும். இலக்கியத்தில் அல்லது வழக்கில் ஆதாரம் இருக்க வேண்டும். நீதிமன்ற வழக்கிற்கும் ஆதாரம் வேண்டும். வாழ்க்கைக்குப் பொருள் ஆதாரமாக இருக்கிறது. வருமானத்திற்கு என்ன ள்ர்ன்ழ்ஸ்ரீங் என்று கேட்கிறார்கள்.

மக்கள் வரலாற்றில் தங்களது மூதாதையர் பற்றிய சோர்ஸ் தேடுகிறார்கள்; நதிக்கு சோர்ஸ் இருக்கிறது; ஊட்டச் சத்துக்கு சோர்ஸ் இருக்கிறது; ஆய்வில் ஈடுபடுவோர் சோர்ஸ் தேடுகிறார்கள்; எரி சக்திக்கு சோர்ஸ் சொல்கிறார்கள்; மின்சாரத்திற்கு, நிதிக்கு சோர்ஸ் தேவைப்படுகிறது. கணினியில் ர்ல்ங்ய் ள்ர்ன்ழ்ஸ்ரீங் இருக்கிறது. இணைய தளத்தில், தகவல் தொழில்நுட்பத்தில் சோர்ஸ் இருக்கிறது. காவல் துறையில் புலனாய்விற்கு உதவ சோர்ஸ் இருக்கிறது. பத்திரிகை செய்திக்கும் சோர்ஸ் தேவை. விருப்பு வெறுப்பை வெளியிடவும் சோர்ஸ் சொல்கிறார்கள். நம்பிக்கைக்கும் சோர்ஸ் சொல்கிறார்கள்.

மற்றவர்களை நம்ப வைப்பதற்கு சோர்ஸ் தேவைப்படுகிறது. நாம் சொல்வதை முதலில் நாம் நம்புவதற்கும் சோர்ஸ் தேவைப்படுகிறது; நாம் நம்பாமலே மற்றவர்களை நம்ப வைப்பதற்கும் இட்டுக்கட்டி சோர்ஸ் சொல்கிறார்கள்.

இப்படி, சோர்ஸ் பல அவதாரங்கள் எடுக்கின்றன. இவற்றை, முதன்மை சோர்ஸ், இரண்டாம்தர சோர்ஸ், மூன்றாம்தர சோர்ஸ் என்று வகைப்படுத்துகிறார்கள்.

அடிப்படையான ஆதாரத்தை முதன்மை சோர்ஸ் என்றும், அதைக்கொண்டு உருவாக்கப்படும் வரலாற்றை அல்லது செய்தியை இரண்டாம்தர சோர்ஸ் என்றும், முதன்மை சோர்ûஸயும் இரண்டாம்தர சோர்ûஸயும் தொகுத்துப் பெறுவதை மூன்றாம்தர சோர்ஸ் என்றும் சொல்கிறார்கள்.

எனவே, சோர்ஸýக்கும் பல சோர்ஸ் இருக்கின்றன. நர்ன்ழ்ஸ்ரீங்ள் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக, வாசகர்கள் பின்வருமாறு தெரிவித்துள்ளனர்:

ஐ. சுரேஷ், கா.அருண், எஸ்.சுரேஷ் - மூலம் / ஆதாரம்

முனைவர் பா.ஜம்புலிங்கம் - தோற்றுவாய் / தரவுகள்

என்.அர். சத்தியமூர்த்தி - கொள்ளிடம் / பிறப்பிடம்

வெ. ஆனந்தகிருஷ்ணன் - மூலவளம்

கா.மு.சிதம்பரம் - தோன்று வாயில்கள் / தோற்று வாயில்கள்

கோ.மன்றவாணன் - ஊற்றகங்கள்

முனைவர் க. அன்பழகன் - அடிமூலம் / தோற்றிடம் / முதலுருமூலம்

செ.சத்தியசீலன் - வளங்கள் வரும் வழிகள்

கீதா முருகானந்தம், ப.இரா. இராசஅம்சன் - ஊற்றுகள்

ப. கோபிபச்சமுத்து - ஊற்றுக்கண்

துரை ஏ. இரமணன் - மூலாதாரம்

சி.இராமச்சந்திரன் - ஆதாரங்கள் / அடிப்படைகள்

சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் சோர்ஸ் என்பதற்கு, தலையூற்று, ஆற்றின் பிறப்பிடம், அடிமூலம், மூலமுதல், ஆதாரம், வளமூலம், தூண்டுமுதல், ஏவுமுதல், முன் ஆதாரம், மூல ஆதார ஏடு என்று இடத்திற்கேற்பப் பயன்படுத்திக்கொள்ள பட்டியல் தரப்பட்டிருக்கிறது.

எனவே நதி, நிதி, நீதி, பத்திரிகை, ஆய்வு, வாழ்க்கை, வரலாறு, கணினி மென்பொருள்கள், தகவல் தொழில்நுட்பம் என்று பலதுறைகளிலும் பயன்பாட்டில் உள்ள நர்ன்ழ்ஸ்ரீங்ள் என்பதற்கு வாசகர்களும் அகராதியும் கூறியுள்ள சொற்களைக் கொண்டு பரவலாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு புதிய சொல்லாக்கமாக "ஆதார வாயில்கள்' என்பதை அமைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. வெறும் "ஆதாரம்', "பிறப்பிடம்', "ஊற்றுகள்' ஆகியவை சோர்ஸ் என்பதற்கான சரியான வார்த்தைகளாக இருக்காது.

Sources - ஆதார வாயில்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com