
அரிது...அரிது...
அரியது எது எனக் கேட்கும் கூர்வடிவேலவனே! மனிதனாகப் பிறப்பது அரிது. மனிதனாகப் பிறந்தாலும், கூன், குருடு, செவிடு, பேடு(அலி) நீங்கிப் பிறப்பது அரிது, அவ்வாறு பிறந்த போதிலும், ஞானமும், கல்வியும் விருப்பிக் கற்றுப் பெறுவது அரிது. அவற்றை விரும்பிக் கற்றபோதும், தானமும் தவமும் செய்வது அரிது. அவ்வாறு தானத்தையும் தவத்தையும் மேற்கொண்பவர்களுக்கு விண்ணுலகத்தின் வாயில்கள் என்றும் திறந்தே இருக்கும்.
அரியது கேட்கின் வடிவடி வேலோய்!
அரிதுஅரிது மானிடர் ஆதல் அரிது!
மானிடர் ஆயினும் கூன், குருடு, செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது!
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது!
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செய்தல் அரிது!
தானமும் தவமும் தான்செய்வர் ஆயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே..!
(ஒüவையார்-தனிப்பாடல்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.