சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்நாட்டைக் கட்டமைப்பதில் பழங்குடியின சமூகம் ஈடு இணையற்ற பங்களிப்பு: பிரதமர் மோடிகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!இந்தியா - நியூசி. கடைசி ஒருநாள்: சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ரோஹித், கோலி!கந்த சஷ்டி விழா: காலை முதலே முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள்: இந்திய அணி பேட்டிங்!முதல்வா் விஜய் நாளை தில்லி பயணம்! பிரதமா் மோடி, சோனியாவை சந்திக்கிறாா்!இந்தியாவில் எஸ்சிஓ கூட்டம்: பாகிஸ்தான் பங்கேற்பதாக அறிவிப்பு! நேபாளம் - அயோத்தி இடையே புதிய வாராந்திர ரயில் சேவை! ரயில்வே வாரியம் ஒப்புதல்!சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்றிரவு 8 மணி வரை மூடப்படும்! தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்! அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு!டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தொழிலதிபா் ரத்தீஷுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ்!லஞ்ச பணம் பறிமுதல் விவகாரம்: உள்ளாட்சித் துறை அதிகாரிகள் 23 போ் மீது வழக்குப் பதிவு

"வேட்கோவர்' வரலாறு!

கிராமங்களில் பல்வேறு தொழில் செய்பவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மக்களின் சுய தேவைக்கு மற்றும் வேண்டும் பொருள்களை அங்கேயே செய்து கொண்டனர்.

Updated On :

கிராமங்களில் பல்வேறு தொழில் செய்பவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மக்களின் சுய தேவைக்கு மற்றும் வேண்டும் பொருள்களை அங்கேயே செய்து கொண்டனர். அவ்வாறு பல தொழில்கள் மேற்கொள்ளப்பட்டாலும், மக்களின் தேவைக்கு ஏற்ப மட்பாண்டங்களைச் செய்து அளித்த குயவர் பெருங்குடி மக்கள் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெற்று விளங்குகின்றனர்.

தொழில்களில் தொன்மைச் சிறப்பு வாய்ந்தது மட்பாண்டத் தொழில். மனிதன் ஓர் இடத்தில் நிலையாகத் தங்கி உணவு உற்பத்தி செய்யத் தொடங்கியது புதிய கற்காலத்தில் (சங்ஜ் நற்ர்ய்ங் அஞ்ங்). அவனுக்கு அப்பொழுது உணவையும், நீரையும் சேகரித்து வைத்துக்கொள்ள மண்பானை போன்ற ஒரு பாத்திரம் தேவைப்பட்டது. களிமண்ணைப் பிசைந்து உருட்டி கைகளால் மண்பானை செய்து, வெயிலில் காயவைத்து பயன்படுத்தினான். இவ்வாறு கைகளால் செய்த பானைகள் (ஏஹய்க் ஙஹக்ங் டர்ற்ள்) பழுப்பு நிறமுடைய - சொரசொரப்பான பானைகள் புதிய கற்கால இடங்களில் - அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.

இதற்குப் பின்னர் வருகிற இரும்பு உலோகக் காலமான பெருங்கற்காலம் (ஙங்ஞ்ஹண்ற்ட்ண்ஸ்ரீ அஞ்ங்) மனிதன் நாகரிகத்தில் ஏற்பட்ட பல முன்னேற்றங்களை எடுத்துக் காட்டுகிறது. தங்குவதற்கு வீடுகள், இரும்புப் பொருள்கள், வண்ணக் கல் மணிகள், சக்கரத்தில் வைத்து வனையப்பட்ட பானைகள் போன்றவை அக்கால நாகரிகத்தின் சிறப்பினை எடுத்துக்காட்டுகிறது. பானைகளில் பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. சூளையில் வைப்பதால் பானையின் உட்பகுதி கறுப்பாகவும் வெளிப்பகுதி சிவந்த நிறமாகவும் காணப்படும். இத்தகைய கறுப்பு - சிவப்பு நிற பானை ஓடுகள் தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் காணப்படுகின்றன.

இராமநாதபுரம் அருகே 30.கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள "தேரிருவேலி' என்ற இடத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில் சங்ககால பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அதில் "கொற்றன்' "நெடுங்கிள்(ளி)' போன்ற பெயர்கள் பண்டைய தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய பானை ஓடுகளில் குறியீடுகள் (எதஅஊஊஐபஐ) பண்டைய தமிழ் எழுத்துகள் எழுதப்பட்டு - பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது. சாதாரண மக்களின் பயன்பாட்டுச் சிறப்பு, பொருளாதார நிலை, கல்வி அறிவு, உணவு உற்பத்தி செய்யும் நிலை போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்ளப் பண்டைய பானை ஓடுகள் பெரிதும் உதவுவதால், தொல்லியல் ஆய்வில் இவை முக்கியமான சான்றாகவும் விளங்குகின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாகப் பயன்படுத்திய பொருள், மட்பாண்டங்களே ஆகும். அதன் தொடர்ச்சிதான் இன்றும் பொங்கல் பண்டிகையின் போது மண்பானை வைத்து பலர் பொங்கலிடுகின்றனர்.

தமிழகம் அயல் நாடுகளுடன் கொண்டிருந்த வணிகம் மற்றும் கலாசாரத் தொடர்பு குறித்து அறிந்து கொள்ளவும், மண்பானை ஓடுகள் பெரிதும் உதவுகின்றன. அரிட்டைன், ரெளலடட், ஆம்பொராமதுஜாடி போன்ற ரோமானிய பானை ஓடுகள் போன்றவை வெளிநாட்டுத் தொடர்பினை எடுத்துக்காட்டுகின்றன. தமிழ்நாட்டில் கரூர், கொடுமணல், மாங்குடி, மரக்காணம், அழகன்குளம், அரிக்கமேடு, மாமல்லபுரம், காஞ்சிபுரம், கங்கைகொண்ட சோழபுரம், நாகப்பட்டினம், பெரியபட்டினம் முதலிய பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் தொன்மை சிறப்புமிக்க மண்பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

மட்பாண்டங்கள் செய்யும் குயவர் பெருமக்களைப் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவர்கள், "வேட்கோவர், கலம் செய்கேரி, மண்வினை மாக்கள், மண்மகன்' என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். அவர்கள் கிராம மக்களுக்கு வேண்டிய பானைகள், சட்டிகள், விளக்குகள் போன்றவற்றை செய்து அளித்தனர்.

அடுத்த வாரம் நிறைவு பெறும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.