தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

சொல் அறிவோம்

சொல் அறிவோம்

Updated On :8 ஆகஸ்ட் 2015, 7:28 pm

இரத்தம் - அரத்தம்

தமிழ் இலக்கண முறைப்படி மொழிக்கு முதலில் "ர' வராது. எனவே, ரத்தம் என்பதை நாம் அனைவரும் இரத்தம் என்றே எழுதி வருகிறோம். இப்படி எழுதுவது தவறானது. அரத்தம் என்ற சொல்லே சரியானது.

*சிவந்த மேனி உடைய சிவன் அரன் எனப்பட்டான்.

*சிவந்த நிறமுடைய அழுத்த மெழுகு

அரக்கு எனப்பட்டது.

* சிவந்த நிறமுடைய தரைவாழ் சிறிய உயிரினம் அரணை எனப்பட்டது.

* சிவந்த நிறமுடைய பூ அரளி  எனப்பட்டது.

* சிவந்த நிறமுடைய பூ அரத்தம்பூ என்றும், அப்பூவே செம்பரத்தம்பூ எனவும் கூறப்பட்டது.

* வெளிர் சிவப்பு நிறமுடைய தூள் அரப்பு எனப்பட்டது.

ஆக, இவை போன்றே சிவந்த நிறம் உடைய குருதி அரத்தம் எனப்படும். அரத்தம் என்று எழுதுவதே சரியானது.

கோழிக் குஞ்சு - கோழிப் பார்ப்பு

கோழிக் குட்டியும் கிடையாது; கோழிக் குஞ்சும் கிடையாது. அதன் பெயர்

கோழிப் பார்ப்பு எனப்படும். "பார்ப்பு' என்பதற்கு "இரட்டைப் பிறப்பு' என்று பொருள். கோழி முட்டை இடுவது முதல் பிறப்பு; அந்த முட்டையை அடைகாத்துக் குஞ்சு பொரிப்பது இரண்டாவது பிறப்பு. எனவே, அது கோழிப் பார்ப்பு ஆயிற்று.

பார்ப்பனர்கள் என்ற ஒரு வகுப்பினர் உள்ளனர். அவர்கள் தாயின் வயிற்றில் பிறப்பது முதல் பிறப்பு. அடுத்து அவர்கள் பூணூல் கலியாணம் செய்து கொள்வது என்பது அவர்களின் இரண்டாவது பிறப்பு என்பர். எனவே, அவர்கள் இரட்டைப் பிறப்பாளர் என்ற பொருளில் "பார்ப்பனர்கள்' எனப்பட்டனர்.

எனவே, கோழிப் பார்ப்பு என்பதே சரியான சொற்றொடராகும்.

-வய்.மு.கும்பலிங்கன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.