சொல் புதிது - 47

''நிற்க அதற்குத் தக'' என்று வள்ளுவர் ஆணையிடுகிறார். சிலர் தேர்தலில் நிற்கிறார்கள்; போக்குவரத்து நெரிசலில் நாம் சாலையில் நிற்கிறோம்.
Updated on
2 min read

''நிற்க அதற்குத் தக'' என்று வள்ளுவர் ஆணையிடுகிறார். சிலர் தேர்தலில் நிற்கிறார்கள்; போக்குவரத்து நெரிசலில் நாம் சாலையில் நிற்கிறோம். பலநேரம், பேருந்தில், தொடர்வண்டியில் என்று போகிற இடங்களில் எல்லாம் நிற்க வேண்டி இருக்கிறது. ஏதாவது வேலையாகப் போனால், போகிற இடங்களிலும் நிற்க வேண்டியிருக்கிறது. இப்படி வாழ்க்கையில் பெரும்பாலான நேரம் நிற்பதில் கழிகிறது. அதனால், "நிற்க' என்பது தமிழில் அதிகம் பயன்பாட்டில் நிற்கும் சொல்லாக இருக்கிறது. ஆனால், திருவள்ளுவர் சொன்ன, ""நிற்க அதற்குத் தக'' அப்படியில்லையே!

நிற்பது எப்படி? நிற்பதில் சுதந்திரம் வெளிப்படுமாம்; வீர சுதந்திரம் அதுதானாம். கற்பதே, கற்றபடி நிற்பதற்குத்தான் என்று வள்ளுவர் சொல்கிறார். மரம்கூட நிற்கிறது; மனிதர்கள் அப்படி இல்லையாம். மற்றவர்கள்

விரும்பும்படி நிற்காமல் மதிக்கும்படி நிற்க வேண்டுமாம். கிடப்பது வேறு; அமர்ந்திருப்பது வேறு; நிற்பது வேறு. வளைந்து குனிந்து நிற்பது, நிற்பது ஆகாதாம். மலை நிற்கிறது; ஆறு நடக்கிறது; குட்டை கிடக்கிறது. கிடக்கிற கோடு வேறு; நிற்கிற கோடு வேறு.

வளையாமல் நிற்கிற நிலையை யங்ழ்ற்ண்ஸ்ரீஹப் என்று சொல்கிறார்கள். தமிழில் எப்படிச் சொல்லலாம்? வாசகர்களின் பரிந்துரைகள் வருமாறு:

  • ராஜசிம்மன் - செங்குத்துக் கோணம்
  • செ.சத்தியசீலன் - உச்சிமுகடு/ செங்குத்து செங்கோடு/ செங்கோணம்
  • இரா.ரெங்கசாமி - தலைகீழ்/ மேலிருத்தல்
  • ப.இரா.இராச அம்சன் - நிமிர்ந்தெழுநிலை/ செங்கோட்டு நிமிர்வு/ செங்குத்து நேர்நிலை
  • சந்திரா மனோகரன் - செங்கோட்டுநிலை/ நிமிர்வுநிலை/ நிலைகுத்தான
  • கோ.மன்றவாணன் - செங்குத்து/ நிலைக்குத்து/ செங்கோட்டுநிலை/ நிமிர்நிலை/ நிமிர்கோடு
  • வெ.ஆனந்தகிருஷ்ணன் - செங்குத்து/ செங்குத்துக் கோடு/ நேர்நிமிர்நிலை/ நிலைகுத்துக் கோடு
  • இராம.வேதநாயகம் - மேல்கீழ்க்கோடு
  • சோ.முத்துமாணிக்கம் - செங்குத்து/ செம்பாதி
  • நா.கிருஷ்ணவேலு, டி.வி.கிருஷ்ணசாமி, நா.முத்தையா, என்.ஆர். ஸத்யமூர்த்தி - செங்குத்தான
  • கு.இரவிச்சந்திரன் - செங்குத்தான/ மேல்நோக்கிய/ மேலோங்கிய
  • ஜனநேசன் - பயனீட்டும் நெடுங்கோடு/ செயலூக்கும் செங்கோடு

காலம், இடம் அல்லது வகைப்பாட்டு வாரியான மதிப்புகளை ஒப்பிட்டுக் காட்டும். தரவு நெடுக்கை வரைபடம் (Column Chart): என்று சொல்லப்படுகிறது. ஆனால், நெடுக்கை என்பது படுக்கை நிலையையும் குறிக்கிறது. செங்குத்து என்பது தலைகுப்புற விழுதலையும் குறிக்கிறது. படுக்கை நிலையில் கிடப்பவற்றைக் கிடைக்கைநிலை என்று சொல்வது போல vertical என்பதை நிற்கைநிலை என்று சொல்லலாம்.

""ஆசாரியன் சிச்சனாருயிரைப் பேணுமவன்

தேசாரும் சிச்சன் அவன் சீர்வடிவை - ஆசையுடன்

நோக்குமவன் என்னும் நுண்ணறிவைக்  கேட்டு வைத்தும்

ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம்!''

என்று மணவாள மாமுனிகளும் நிற்கை எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். ""ஆசில்நவா நாப்பண் அடையாது அருளினால் வாசியிடை நிற்கை வழக்கு'' என்பது உமாபதி சிவாச்சாரியாரின் திருவருட்பயனாகும்.

எனவே, ஸ்ங்ழ்ற்ண்ஸ்ரீஹப் என்பதை நிற்கைநிலை என்று சொல்லலாம். கற்கை என்பதுபோல நிற்கையும் வழக்கில் எளிதாக வரும் வாய்ப்பு இருக்கிறது.

Vertical - நிற்கைநிலை

22-2-15 தேடலுக்கான சொல் - Hang

(கணினியின் பயன்பாட்டில்)

1-3-15 தேடலுக்கான சொல் -ட்ர்ற் ள்ல்ர்ற் (கணினியின் பயன்பாட்டில்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com