தமிழ்ச் செல்வங்கள்: ஆடு

மதுரை - திருமங்கலம் - நெடுஞ்சாலை! மதுரையில் இருந்து பத்துக் கல் தொலைவில் திருநகர்; சாலைக்கு வட பால் திருநகர்; தென்பால் பாண்டியன் நகர்; அதன் தென் பால், தென்னகர்! முகப்பு வீடு ஆதலால் நான்கு தெருவுக்கும் சந்திப்பு.

மதுரை - திருமங்கலம் - நெடுஞ்சாலை! மதுரையில் இருந்து பத்துக் கல் தொலைவில் திருநகர்; சாலைக்கு வட பால் திருநகர்; தென்பால் பாண்டியன் நகர்; அதன் தென் பால், தென்னகர்! முகப்பு வீடு ஆதலால் நான்கு தெருவுக்கும் சந்திப்பு.
சிறிய வீடு எனினும் மாடியும் உண்டு; மாடியில் கீழே உள்ளது போல் தாழ்வாரமும் உண்டு. தாழ்வாரத்தில் இருந்து படித்துக் கொண்டிருக்கிறேன். நாய் ஒன்றன் ஓங்கிய குரைப்புக் கேட்டது. கீழே தெருவை நோக்கினேன். பீடுமிக்க வெள்ளையாட்டுக் கடா ஒன்று நின்றது. நாய் சுற்றிச் சுற்றி வந்து குரைத்தது! ஆடு அசையவில்லை! பெருமிதமாக நின்று கொண்டே இருந்தது. நாய் குரைத்தால் சொல்ல வேண்டுமா?குரைப்புக் கேட்ட நாய்கள் ஒன்று ஒன்றாக வந்தன! ஒன்றா, இரண்டா? ஏழு நாய்கள் சுற்றி நின்று குரைத்தன சுற்றிச் சுற்றிக் குரைத்தன!
ஒரு நாய் குரைப்புக்கு அசையாப் பெருமிதம், ஏழு நாய்கள் சூழக் குரைப்பினும் அசையாப் பெருமிதமாகவே நின்றது!கால் மணி நேரம் தொண்டை வலியெடுக்க உருமின}ளொள்' ளிட்டன! கடித்துக் குதறுவது போல் எட்டத்தில் இருந்து பாய்ச்சல் காட்டின! முன் கால் மண் பறிக்க, பின் கால் வெட வெடக்க வீறு காட்டின! ஆனால், இடைவெளி எட்டு, பத்து அடிகளுக்கு அப்பாலேயே!
தொண்டை வற்றியதா? தோல்வி கிளர்ந்ததா? ஒன்றொன்றாகச்சென்றன! ஒலியும் கத்தும் உருமலும் ஓய்ந்தன!

""வருவிசைப் புனலை ஒருதான்
தாங்கும் பெருமை'' என்றும்,

""கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே''

என்றும் சொல்லப்பட்ட தொல்காப்பிய நூற்பா விளக்கப் பெருமிதத்தைக் கண்ணேரில் கண்டு களிப்புற - தெளிவுற - நிறுவியது வெள்ளாட்டுக் கடா!
"ஆடு' என்பதற்கு "வெற்றி' என்று பொருள் கண்டானே, ""ஆடு ஆடு'' (வெற்றி, வெற்றி) என்ப ஒரு சாராரோ'' என்று மற்களப் போர் வெற்றியைப் பாடினாரே நக்கண்ணையார் என்ற சங்கத்துப் பெண்பாற் புலவர் ஒருவர் (புறம் 85). இவர்களை யெல்லாம் கண்முன் கொண்டு வந்து காட்டிவிட்டதே "ஆடு, கடா'. "சொற் படைப்பாளி, பொற் படைப்பாளி' என்ன வைக்கிறதே "ஆடு'.

- தொடர்வோம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com