

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும். (பாடல்-21)
வழக்கினது முடிவான உண்மையை ஆராயும் அறிவு நிரம்பப் பெறாதவன், சிறுவயதினன் என்றிகழ்ந்த, நரைமயிருள்ள முதியோர் இருவரும் மகிழும்படி, நரைமயிரை முடியின்கண் முடித்து வந்து, (அவர்கள் கூறிய) சொற்களைக் கொண்டே நீதி கூறினான் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன், தத்தம்
குலத்திற்குரிய அறிவு அந்நூல்களைக் கல்லாமலே இனிது அமையும். (க.து.) குலவித்தை கல்லாமலே அமையும். "குலவித்தை கல்லாமலே உளவாம்' என்பது இச்செய்யுளிற் கண்ட பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.