

வண்ணக ஒத்தாழிகைக் கலிப்பா
அத்திறத்தா லசைந்தன தோள் (1)
அலரதற்கு மெலிந்தன கண் (2)
பொய்த்துரையாற் புலர்ந்தது முகம் (3)
பொன்னிறத்தாற் போர்த்தன முலை (4)
அழலினா லசைந்தது நகை (5)
அணியினா லொசிந்த திடை (6)
குழலினா னிமிர்ந்தது முடி (7)
குறையினாற் கோடிற்று நிறை ( 8)
(இவை இடையெண்)
உட்கொண்ட தகைத்தொருபால் (1)
உலகறிந்த வலத்தொருபால் (2)
கட்கொண்ட றுளித்தொருபால் (3)
கழிவெய்தும் படிற்றொருபால் (4)
பரிவுறூஉந் தகைத்தொருபால் (5)
படர்வுறூஉம் பசப்பொருபால் (6)
இரவுறூஉந் துயரொருபால் (7)
இளிவந்த வெளிற்றொருபால் (8)
மெலிவுவந் தலைத்தொருபால் (9)
விளர்ப்புவந் தடைந்தொருபால் (10)
பொலிவுசென் றகன்றொருபால் (11)
பொறைவந்து கூர்ந்தொருபால் (12)
காதலிற் கதிர்ப்பொருபால் (13)
கட்படாத் துயரொருபால் (14)
ஏதில்சென் றணைந்தொருபால் (15)
இயனானிற் செறித்தொருபால் (16)
(இவை சிற்றெண்)
(தனிச்சொல்)
எனவாங்கு
(சுரிதகம்)
"இன்னதிவ் வழக்கம் இத்திற மிவணலம்
என்னவு முன்னாட் டுன்னா யாகிக்
கலந்த வண்மையை யாயினும் நலந்தகக்
கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக்
கற்பொடு காணிய யாமே
பொற்பொடு பொலிகநும் புணர்ச்சி தானே'
இதில் உள்ள அராக உறுப்பு ஏழு சீர்களை உடைய அடிகள் நான்கால் வந்தது காண்க.
இதில் உள்ள அம்போதரங்க உறுப்பில், முறையே நாற்சீர் ஈரடிகளாலான இரண்டு பேரெண்ணும், நாற்சீர் ஓரடியாலான நான்கு அளவெண்ணும், முச்சீர் ஓரடியாலான எட்டு இடை யெண்ணும், இரு சீர் ஓரடியாலான பதினாறு சிற்றெண்ணும் வந்தன.
வெண்கலிப்பா:
கலித்தளையும், வெண்டளையும் விரவிவந்த நாற்சீரடிகளால் நடந்து இறுதியடி மூன்று சீர்களால் அமைந்தால் அது வெண்கலிப்பா ஆகும். வெண்டளையே வந்தால் அது கலிவெண்பாவாம். வெண்கலிப்பாவுக்கு உதாரணம்.
"வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்கக்
கோளார்ந்த பூனாகங் குழைபுரளக் கோட்டெருத்தின்
மாலைதாழ் கூந்தலார் வரன்முறையான் வந்தேத்தச்
சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தம் சொல்முறையான்
மனையறமும் துறவறமும் மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும்
வினையறுக்கும் வகைதெரிந்து வீடொடுகட் டிவையுரைத்த
தொன்மைசால் கழிகுணத்தெந் துறவரசைத் தொழுதேத்த
நன்மைசால் வீடெய்து மாறு'
இந்தப் பாட்டில் காய்முன் நிரை வந்த கலித்தளையும், காய்முன் நேர் வந்த வெண்டளையும் விரவி வந்தது காண்க.
(தொடர்ந்து பாடுவோம்...)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னையில் திருவரங்கம்!

வாழ வைக்கும் வள்ளல்
விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு!
புதிய திரைப்படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
வீடியோக்கள்

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | March 1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

First Exclusive | திமுகவில் இணைந்த OPS: விவரிக்கும் உசிலம்பட்டி MLA Iyyappan | Dinamani | DMK
தினமணி வீடியோ செய்தி...

