பெரியோர் வழுவார்
By முன்றுறையரையனார் | Published On : 05th May 2019 01:00 AM | Last Updated : 05th May 2019 01:00 AM | அ+அ அ- |

பழமொழி நானூறு
மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்
கூடம் மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல்
பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர்
ஈடில் லதற்கில்லை பாடு. (பா-96)
"வீடு அழிந்தவிடத்து' அதிலுள்ள மரங்கள், பின்னையும் கட்டுவதான வீட்டிற்குப் பயன்படும். அதுபோலவே, அறிஞர்கள் செல்வம் அழிந்த இடத்தும் பெருந்தகைமையின்கண் வழுவார். (ஆகையால்), வலியில்லாததற்குப் பெருமையில்லை. (க-து) தமது செல்வம் அழிந்த இடத்தும் பெருந்தகைமையின் கணின்றும் வழுவார் பெரியோர். "ஈடில்லதற்குப் பாடில்லை' என்பது பழமொழி.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...