
பகைவரை முன்னரே அறிந்து களைக!
முன்னலிந் தாற்ற முரண்கொண் டெழுந்தோரைப்
பின்னலிது மென்றிருத்தல் பேதைமையே - பின்சென்று
காம்பன்ன தோளி கடிதிற் கடித்தோடும்
பாம்பின்பல் கொள்வாரோ இல். (பாடல்-148)
மூங்கிலையொத்த தோள்களையுடையாய்! மிகவும் மாறுபாடு கொண்டு, முற்பட்டுத் தம்மை நலிய எழுந்தவர்களை பின்னர் ஒருகாலத்து அவரை வருத்த மாட்டுவேம் என்று சோம்பி இருத்தல் அறியாமையேயாம். விரைந்து கடித்து ஓடுகின்ற பாம்பினது நச்சுப்பல்லை அதன் பின் சென்று கொள்வார் ஒருவருமிலராதலின். (க-து.) பகைவரை அவர் மாறுபட்டு எழுவதற்கு முன்னரே அறிந்து களைக என்றது இது. "கடிதிற் கடித்தோடும்பாம்பின்பல் கொள்வாரோ இல்' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.