பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

கொழித்துக் கொளப்பட்ட நண்பி னவரைப்பழித்துப் பலர் நடுவண் சொல்லாடார் } என்கொல்?விழித்தலரும் நெய்தல் துறைவ! உரையார்
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்


கொழித்துக் கொளப்பட்ட நண்பி னவரைப்
பழித்துப் பலர் நடுவண் சொல்லாடார் } என்கொல்?
விழித்தலரும் நெய்தல் துறைவ! உரையார்
இழித்தக்க காணின் கனா. (பா}182)


கண்கள் விழித்திருப்பனபோன்று மலர்கின்ற நெய்தற் பூக்களையுடைய கடல் துறைக்கு உரியவனே! ஆராய்ந்து தெளிந்து கொள்ளப்பட்ட நண்பர்களைப் பழித்து, அறிவுடையோர் பலர் நடுவிலே சொல்லாட மாட்டார்கள்;  காரணம்,  தமக்கு இழிவைத் தருவன பற்றிக் கனவு கண்டவர், அதனை யாருக்கும் சொல்ல மாட்டார்கள் என்பதால். நண்பரை பழிகூறித் தூற்றினால் அந்த இழிவு நம்மையும் வந்தடையும் என்பது கருத்து. "இழித்தக்க காணின் கனா' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com