பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

காட்டிலிருந்து தவம் செய்யும் அமணர்க்கும், ஓட்டால் வரும் பயன் எல்லாம் பலர் உறையும் ஊரினிடத்ததாகவே விளங்கும்.
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தாரேற்ற நீண்மார்பின் தம்மிறைவன் நோக்கியக்கால்
போரேற்றும் என்பார் பொதுவாக்கல் வேண்டுமோ? 
யார்மேற்றாக் கொள்ளினும் கொண்டீக் காணுங்கால் 
ஊர்மேற்றதாம் அமணர்க்கு ஓடு. (பாடல்-231)

காட்டிலிருந்து தவம் செய்யும் அமணர்க்கும், ஓட்டால் வரும் பயன் எல்லாம் பலர் உறையும் ஊரினிடத்ததாகவே விளங்கும். அரசன் குறித்து நோக்கியபோதே, போரை ஏற்றுச் செல்வோம்' எனத் தறுகண்மை பேசுபவர்கள்,  "அவன் பொதுவாகவே நோக்கினான்; நம்மைக் குறிப்பிட்டு நோக்கவில்லையே' என்று நினைக்காமல், யாரை அவன் பார்த்தாலும், அதனைத் தம்மேலேயாக நோக்கினான் என்று கருதி, அச்செயலை முடிப்பதே சிறப்பு. "ஊர் மேற்றதாம் அமணர்க்கு ஓடு' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com