சித்திரை முதல் நாள்... தொல்காப்பியர் திருநாள்!

தொல்காப்பியம்தான் தமிழின் முதல் நூல் என்று தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.  தொல்காப்பியம் தமிழர்களின் அறிவியல் செய்திகளுக்கும், வாழ்வியல் விழுமியங்களுக்கும் வரையறை தரும் கலங்கரை விளக்கு.
சித்திரை முதல் நாள்... தொல்காப்பியர் திருநாள்!
Published on
Updated on
2 min read


தொல்காப்பியம்தான் தமிழின் முதல் நூல் என்று தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. தொல்காப்பியம் தமிழர்களின் அறிவியல் செய்திகளுக்கும், வாழ்வியல் விழுமியங்களுக்கும் வரையறை தரும் கலங்கரை விளக்கு.

2011 செப்டம்பர் 2-ஆம் தேதி தினமணியில், ""சித்திரை மாதம் தமிழ் வருடப் பிறப்பாக தமிழர்களிடையே விளங்குகிறது. அதனைத் "தொல்காப்பியர் திருநாள்' என அறிவிக்கலாம்'' என பேரா.தமிழண்ணல் எழுதியிருந்தார்.

முப்பத்தி மூன்று ஆண்டுகளாய், ஐம்பத்தைந்து அமெரிக்க நகரங்களின் தமிழ்ச் சங்கங்கள் கூட்டுப் பேரவை (ட்ற்ற்ல்://ச்ங்ற்ய்ஹ.ர்ழ்ஞ்) இயங்குகிறது. சித்திரை முதல் நாளைத் தொல்காப்பியர் திருநாள் என தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்துக் கொண்டாட வேண்டும் என்று அவர்கள் தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தைப்பூசம், தமிழ்நாடு நாள் என்று புதிய விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழின், தமிழரின் அடிப்படை நூலைத் தந்த தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல் நாள் (தமிழ்ப் புத்தாண்டு தினம்) வரும்போது, மாணவர்கள் இளைஞர்கள் எல்லோரும் தொல்காப்பியம், தமிழ்வழிக் கல்வி, நம் மரபுகள் இவற்றை வாழையடி வாழையாக வளர்ப்பதன் தேவையை நினைக்க ஒரு வாய்ப்பாக அமையும்.

தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்: பொருள் இலக்கணம் என்பது ஆங்கிலத்தில் டர்ங்ற்ண்ஸ்ரீள் எனப்படும். மேலை நாடுகளுக்கு எல்லாம் பொருள் இலக்கண நூலை எழுதியவர் கிரேக்க மேதை அரிஸ்டாட்டில். இந்தியாவிலே முதலில் வாழ்க்கையை அகம், புறம் எனப் பிரித்து அதன் திணை, துறைகளும், ஆண்டின் ஆறு பருவங்களும், சூழலியல் உயிரிகளைப் பற்றிய மரபியலும் கொண்ட பொருள் இலக்கணம் எழுதியவர் தொல்காப்பியர்தான். எனவே, தொல்காப்பியர் "கிழக்கு திசையின் அரிஸ்டாட்டில்' என்று போற்றப்படுகிறார்.

திராவிட மொழிகளை ஆராயவும், வடசொற்கள் அளவுக்கு மீறித் தமிழில் புகாமல் இருக்கவும், வேர்ச்சொல் ஆய்வுகளுக்கும், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் படைக்கவும், சிந்து சமவெளி தமிழ் ஆய்வுகளுக்கும் தொல்காப்பியர் தந்த இலக்கணம் மூல ஊற்றாக விளங்குகிறது. தமிழரின் பெருமைகளில் முக்கியமானது தொல்காப்பியம்.

உலகளாவிய நிலையில் ஒவ்வோர் ஆண்டும் பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன. தொல்காப்பியம் மொழியியல், இலக்கியவியல் கருத்துகளோடு இயற்பியல் (நிலம், தீ, நீர் வளியொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம், மரபியல்.91); உயிரியல் (ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே') என்று ஆறு வகை அறிவையும் பட்டியலிட்டதோடு (மரபி. 27), அவற்றை உடைய உயிரினங்களையும் விளக்கியுள்ளது (மரபி. 28-33) ; தாவரவியல் (ஓரறிவு உடைய தாவரங்களில் புல், மரம் வேறுபாடு, (மரபி. 87) ; உடலியல் (உந்தி முதலாக முந்துவளி தோன்றி) என்று எழுத்துப் பிறப்பை விளக்குவது, பிறப்பியல் 1); சமூகவியல் (உயர்ந்தோன், இழிந்தோன், ஒப்போன் என்று மொழி பயன்பாட்டு அடிப்படையில் விளக்கியதோடு (எச்சவியல். 48) அந்தணர், அரசர், வணிகர் , வேளாளர் என்று தொழில் அடிப்படையில் விளக்கியது (மரபி.71- 86) என்பவற்றோடு நூலியல் (செய்யுளியல் 164 - 170) மரபி. 99-102, 106-109) உரையியல் (செய்யுளியல் 78, மரபியல் 102-105) கருத்துகள் காணப்படுவதால், தொல்காப்பியம் தமிழின் "முதல் அறிவியல் களஞ்சியம்' ஆகும்.

தமிழ் மாதப் பெயர்கள் ஐ என்றும், இ என்றும் முடியும் என சித்திரை, வைகாசி போன்ற 12 மாதப் பெயர்களின் இலக்கணத்தைத் தந்தவரும் தொல்காப்பியரே ஆவார். உயிர் மயங்கியலில் (46) இகர ஈற்றுச் சொற்களின் புணர்ச்சி மாற்றத்தைக் கூறும்போது, "திங்கள்முன்னே இக்கே சாரியை' என்பதால் வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மாசி, மார்கழி, பங்குனி என்பதும், (சூத்திரம்.84) ஐகார ஈற்றுப் புணர்ச்சியை விளக்கும் பகுதி என்பதால் சித்திரை, கார்த்திகை, தைஆகிய மூன்றும் அடங்கும்.

இதேபோல, 27 நட்சத்திரப் பெயர்களின் கடைசி எழுத்துகளுக்கும் தொல்காப்பிய நூற்பாக்கள் வழங்குகின்றன. தமிழர்கள் வாழ்வில் சித்திரை 1-ஆம் நாள் (சகாப்தம்) வருடப் பிறப்பாக பல நூற்றாண்டுகளாக விளங்குகிறது.
மேஷ ராசியில் சித்திரை தொடங்குவதைப் பத்துப்பாட்டில் முதன்முறையாகக் காண்கிறோம். வளர்

முகமாக இந்நாள் அமைந்துள்ளது. சித்திரை முதல் பங்குனி ஈறாக எல்லா மாதங்களுக்கும் இலக்கணம் அளித்தவர் தொல்காப்பியரே. எனவே, எந்த நாளையும்விடப் பொருத்தமாக தமிழ் வருஷப் பிறப்பு நாள் ஆகிய சித்திரை ஒன்று அமையும்.

அதனை, அரசாணை (மூலம்) வெளியிட்டு, தமிழ் வருஷப் பிறப்பு (சித்திரை-1) அன்று "தொல்காப்பியர் திருநாள்' என அரசு ஆண்டுதோறும் கொண்டாடும் என அறிவிக்க வேண்டுகிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com