புதிதாகக் கிட்டிய கிளியன்னவூர் தேவாரப் பதிகம்

திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி நெடுஞ்சாலையில் 15-ஆவது கி.மீ. தூரத்தில் கிளிநலூர் அல்லது கிளியனூர் (கிளியன்னவூர்) என மக்கள் அழைக்கும் ஊர் ஒன்றுள்ளது.
Published on
Updated on
1 min read

திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி நெடுஞ்சாலையில் 15-ஆவது கி.மீ. தூரத்தில் கிளிநலூர் அல்லது கிளியனூர் (கிளியன்னவூர்) என மக்கள் அழைக்கும் ஊர் ஒன்றுள்ளது. திருக்கிளியன்னவூர் திருத்தலம் 276-ஆவது திருமுறைத்தலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு அகத்தீஸ்வரர் திருக்கோயில் (சிவாலயம்) உள்ளது. சுவடி, ஏடுகளிலிருந்து அச்சு நூலாக தேவாரப் பதிப்புகள் பல வெளிவந்தபோதிலும், அவற்றில் இவ்வூருக்கென எந்தப் பதிகமும் இடம்பெறாமல் இருந்தது.

1930-ஆம் ஆண்டில் ஒரு சுவடியில் "கிளியன்னவூர் பதிகம்' என்ற பெயரில் இவ்வூருக்கென ஒரு பதிகம் இருப்பது கண்டறியப்பட்டு,  அதை ஏட்டிலிருந்து பெயர்த்தெழுதி, 1932-இல் "சித்தாந்தம் மலர் 5, இதழ்-11-இல் பதிப்பித்து வெளியிட்டனர். இதன் பிறகே தொண்டை நாட்டுத் தேவாரத் திருத்தலங்கள் வரிசையில் 33-ஆவது பதியாக இவ்வூர் சேர்க்கப்பட்டது. 

இந்த ஏட்டுச் சுவடி வாயிலாக தமிழ் மக்களுக்கு திருஞானசம்பந்தரின்( "தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின் / சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர்') மேலும் ஒரு பதிகம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் திருமுறையில் 127-ஆவது பதிகமாக இப்பதிகம் போற்றத்தக்கதாக ஆகிவிட்டது.

ஆனால், வெளிவந்துள்ள காசி மடம் பதிப்பு தேவாரப் பதிப்புகள் வரை, இக்கிளியன்னவூர் பதிகம் வெளிவர வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. திருவிடைவாய் கல்வெட்டுப் பதிகம் மட்டும் காசி மடம் பதிப்பில் வெளிவந்தது போல், கிளியன்னவூர் கெளசிகப் பதிகமும் குடவாயில் பாலசுப்பிரமணியன் "தேவார மாண்பும் ஓதுவார் மரபும்' நூலில் பதிவாகியுள்ளதை இனி வெளிவரச் செய்து மகிழலாம். 

இப்பதிகத்தில் மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனார் இருவரும் பாண்டியன் நெடுமாறனுக்குத் திருஞானசம்பந்தர் மூலம் சுரம் (வெப்பு நோய்) போக்கிய செய்தி பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பதிவு செய்த குடவாயிலார் செயலை நன்றி பாராட்டி வணங்குவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com