பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
By | Published On : 21st February 2021 09:39 PM | Last Updated : 21st February 2021 09:39 PM | அ+அ அ- |

தூய்மை மனத்தவர் தோழர் மனையகத்தும்
தாமே தமியர் புகல்வேண்டா - தீமையோன்
ஊர்மிகின் இல்லை கரியோ ஒலித்துடன்
நீர்மிகின் இல்லை சிறை. (பாடல்-190)
ஒருவன் தீமையாளன் என்று ஊரெல்லாம் பழிமிகுந்துவிட்டால், அதனைப் போக்கிக்கொள்ளத் தகுந்த சாட்சி எதுவுமே அவனுக்குக் கிடைப்பதற்கு வழியில்லை. வெள்ளம் ஆரவாரத்துடன் மிகுதியாகப் பெருகி வருமானால், அதைத் தடுத்து நிறுத்துவதற்கு ஒரு சிறையும் உலகிலே கிடையாது. இப்படியே ஊரிற் பெருகும் பழியையும் தடுக்க முடியாது. அதனால், தூய்மையான மனத்தை உடையவர்கள், தம் தோழருடைய வீட்டினுள்ளும்கூடத் தாமே தனியராக ஒருபோதும் செல்லுதல் கூடாது. "நீர்மிகின் இல்லை சிறை' என்பது பழமொழி.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...