பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன்சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய்!மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்


பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய்!
மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலுந்தன் வாயால் கெடும் (பாடல்-184)


நல்லவளே! மணலினுள்ளே முழுகி மறைந்து கிடக்கின்ற தவளையும், தன் குரலைக் காட்டிக் கத்திக் கொண்டிருக்கிற தன்னுடைய வாயின் செயலாலேயே அழிவு எய்தும். அதுபோலவே பிறரைப் பற்றிய பொல்லாங்கான பேச்சுக்களைப் பேசிவிட்டு மறைந்து திரியும் பேதையும், தன்னுடைய சொல்லினாலேயே தன்னைத் துயரத்தினுள் அகப்படச் செய்து கொள்வான். "நுணலுந்தன் வாயால் கெடும்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com