பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
By | Published On : 27th March 2022 04:34 PM | Last Updated : 27th March 2022 04:34 PM | அ+அ அ- |

தம்தீமை இல்லாதார் நட்டவர் தீமையும்
எம்தீமை என்றே உணர்வதாம்-அந்தண்
பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப!
ஒருவர் பொபைஇருவர் நட்பு. (பாடல்-247)
கரையோடு பொருதலான அலைகள் வந்து உலவுகின்ற பொங்கும் நீர்வளத்தினை உடைய சேர்ப்பனே! ஒருவர் பொறுக்கும் பொறுமையானது இருவரின் நட்புக்கும் உதவியாகும். நட்பு செய்தவர்களுக்குத் தம்மால் செய்யப்பட்டதொரு தீமை எதுவும் இல்லாதவர்கள், தமக்கு நண்பர்கள் செய்யும் தீமையையும், "எம் தீவினைப் பயனால் வந்ததே இது' என்று நினைத்து அதனைப் பாராட்டாது பொறுத்துக் கொள்ளவே செய்வர். "ஒருவர் பொறைஇருவர் நட்பு' என்பது பழமொழி.
(திருத்தம்: சென்ற வாரம் பாடல் எண். 126 எனத் தவறுதலாக வெளியாகிவிட்டது. அப்பாடல் எண் 246 என்பதே சரியானது)