பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அழகிய அணிகளை அணிந்து இருப்பவளே! கொடி பறக்கும் வலிமை வாய்ந்த தேர் உடைய அரசரின் கூட்டுறவில் வாழ்பவர் அரசர் ஆணையிட்ட செயலை உடனே எடுத்துச் செய்து முடிப்பர்.
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அரசாணையை உடனே நிறைவேற்றல்

கொடித் திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்,
எடுத்து மேற்கொண்டவர் ஏய வினையை
மடித்து ஒழிதல், என் உண்டாம்? - மாணிழாய்! - கள்ளைக்
குடித்துக் குழைவாரோ இல்.     (பாடல்: 331)

அழகிய அணிகளை அணிந்து இருப்பவளே! கொடி பறக்கும் வலிமை வாய்ந்த தேர் உடைய அரசரின் கூட்டுறவில் வாழ்பவர் அரசர் ஆணையிட்ட செயலை உடனே எடுத்துச் செய்து முடிப்பர். சோம்பலால் செய்யாது இருக்க மாட்டார். செயல்திறம் உள்ளவர் உரிய செயலைச் செய்யாமல் கள்ளைக் குடித்து மயங்கிக் கிடக்க மாட்டார் அல்லவா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com