
பருவம் எனைத்துள? பல்லின்பால் ஏனை?
இருசிகையும் உண்டீரோ? என்று - வரிசையால்
உண்ணாட்டங் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
எண்ணார், அறிவுடையார்.
(பாடல் 18 அதிகாரம் இளமை நிலையாமை)
"பிராயம் எவ்வளவு ஆகியுள்ளது! பல்லின் தன்மை எப்படியுள்ளது? இரண்டு கவளமும் உண்டு வீட்டீரோ?' என்று வயது முதிர்ச்சியினை முறைமையால் உள்ளத்திலே எண்ணி ஆராய்தலைச் செய்யப்படுவதனால், தேகத்தின் வலிமையைப் பற்றி எண்ணி, அறிவு உடையவர்கள் அளவுக்குமீறி மகிழ மாட்டார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.