
வாழ்நாட்கு அலகா வயங்குஒளி மண்டிலம்
வீழ்நாட் படாஅது எழுதலால்,-வாழ்நாள்
உலவாமுன் ஒப்புரவு ஆற்றுமின்; யாரும்
நிலவார், நிலமிசை மேல்.
(பாடல் 22 அதிகாரம் : யாக்கை நிலையாமை)
உங்களுடைய ஆயுள் நாட்களுக்குக் கணக்கிடுவதுபோல, ஒளி விளக்கமுடைய ஞாயிற்று மண்டிலம், உதித்தலில்லாத வீழ்நாள் ஏற்படாதபடி தவறாது உதயமாகின்றது.
அதனால், வாழ்நாள் அழிந்து போவதற்கு முன்பாகவே உங்கள் கடமையான அறங்களைச் செய்து நல்வாழ்வுக்கு வழிதேடுங்கள். இந்த உலகத்தின்மேல், எத்தகையவரேயானாலும் நிலையாக நிலைபெற்றிருக்க மாட்டார்கள் என்பதை உணருங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.