

'இன்றுகொல்? அன்றுகொல்? என்றுகொல்?' என்னாது,
'பின்றையே நின்றது கூற்ற'மென றெண்ணி
ஒருவுமின், தீயவை, ஒல்லும் வகையான்
மருவுமின் மாண்டார் அறம்.
பாடல் 36 அதிகாரம்: அறன் வலியுறுத்தல்)
இன்றைக்கோ, அன்றைக்கோ, என்றைக்கோ என்று எல்லாம் நினையாமல், கூற்றமானது உயிரைக் கொள்ளும் பொருட்டாக நம் பின்னேயே வந்து உரிய சமயத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றது.
இங்ஙனம் உண்மையை நினைந்து, தீய செயல்களிலே ஈடுபடுவதை உடனேயே விட்டுவிடுங்கள். மாட்சிமையுடைய சான்றோர்கள் கடைப்பிடித்த தரும மார்க்கத்தில் உங்களால் முடிந்த வகைகளில் எல்லாம் உடனேயே ஈடுபடுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.