

மக்களால் ஆய பெரும்பயனும், ஆயுங்கால்,
எத்துணையும் ஆற்றப் பலவானால்,-தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாது, உம்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.
(பாடல் 37 அதிகாரம்: அறன் வலியுறுத்தல்)
மக்களாக உடலெடுத்துப் பிறந்ததனால் செய்யத்தக்க பெருமையாகிய பயன்களும் ஆராயுங் காலத்தே, எவ்வளவினும் மிகவும் பலவாகும். ஆதலினாலே, நரம்பு தசை முதலியவை சேர்ந்த உடலின் நன்மைக்காகவே, உபயோகமான செயல்களைச் செய்து நடவாமல், மேலுலகத்திலே இருந்து அநுபவிக்கும்படியான பேரின்பத்தைக் கருதி, அதனைத் தருகின்ற அறவழியிலேயே அனைவரும் செயற்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.