
பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தன்று, இளமை; }'நனிபெரிதும்
வேற்கண்ணள்!' என்றிவளை வெஃகன்மின்; மற்றிவளும்
கோற்கண்ணள் ஆகும், குனிந்து.
(பாடல் 17 அதிகாரம் இளமை நிலையாமை)
குளிர்ச்சி பொருந்திய சோலைகளிலேயுள்ள, பயனைத் தருகின்ற மரங்கள் எல்லாம், கனிகள் உதிர்ந்து வீழ்ந்தபின் தோன்றும் பரிதாபமான நிலையினைப் போன்றதுதான் வாழ்வு. 'மிகவும் சிறப்பான வேல் போன்ற கண்களை உடையவளாக இருக்கின்றாள்' என்று சொல்லி, இவளை விரும்பாதீர்கள். இவளும், தன் உடல் குறுகி, கண் பார்வை இழந்து, தன் வழி தெரிவதற்கு தன் கைக்கோலையே கண்ணாகக் கொள்ள வேண்டிய முதியவளாக ஆகிவிடுபவளே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.