

என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவது என்று பிடித்திரா- முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில் தீக்கூற்றம்
தொடுத்தாறு செல்லுஞ் சுரம்!
(பாடல் 5, அதிகாரம்: செல்வம் நிலையாமை)
ஏதாவது ஒரு பொருள் தம் கையில் கிடைக்கப் பெற்றால், இது நமக்குப் பின் காலத்திலே உதவுவது என்று அதனை இறுகப் பற்றிக் கொண்டிராமல், பிறருக்கு அதைக் கொடுத்து மகிழ்ந்தவர்கள், வெம்மையான பாழ் நரகிலிருந்து தப்பிச் செல்வார்கள்; சுவர்க்கமும் அடைவார்கள். செய்யாத பிறரோ, அந்த வெம்மையிலேயே வீழ்ந்து தவிப்பார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.