
யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர், தாம்பெற்ற
யாக்கையால் ஆய பயன்கொள்க;-யாக்கை
மலையாடும் மஞ்சுபோல் தோன்றி, மற்றாங்கோ
நிலையாது நீத்து விடும்.
(பாடல் 28 அதிகாரம்: யாக்கை நிலையாமை)
உடலானது, மலைமுகடுகளிலே தவழ்ந்து செல்லும் வெண்மேகம் போலத் தோன்றி, அவ்விடத்திலே நிலைத்திராமல், அதனைக் கைவிட்டுப் போய்விடும் தன்மையது.
அதுபோலவே, உயிரும் உடற்கூடெடுத்துத் தோன்றிப் பின் அதனைக் கைவிட்டுப் போய்விடும் இயல்பினை உடையது. அதனால் உடலினை உறுதி உடையதாகப் பெற்றவர்கள், தாம் பெற்ற அந்த உடலால் ஆன நல்ல பயன்களை எல்லாம் உடனேயே நிறைவேற்றிக் கொள்வார்களாக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.