'புன்னுனிமேல் நீர்போல் நிலையாமை' என்றெண்ணி,
இன்னினியே செய்க அறவினை-'இன்னினியே
நின்றான், இருந்தான், கிடந்தான், தன் கேள் அலறச்
சென்றான்' எனப்படுத லான்!
(பாடல் 29 அதிகாரம்: யாக்கை நிலையாமை)
இப்பொழுதுதான் ஒருவன் நின்று கொண்டிருந்தான்; அப்புறம் உட்கார்ந்தான்; அப்புறம் படுத்தான்; அப்புறம் தன் உறவின் முறையார்கள் அலறித் துடிதுடிக்க இறந்து போய்விட்டான்!' இப்படி உடலின் நிலையாமை பற்றிச் சொல்லப்படுவதனால், 'புல்லின் நுனியின் மேலாக இருக்கும் நீர்த்துளியைப் போன்று யாக்கையும் நிலையாமை உடையது' என்று எண்ணி, இப்பொழுதே அறச்செயல்களைச் செய்வதிலே ஈடுபடுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.