
மன்றம் கறங்க மணப்பறை யாயின,
அன்றவர்க் காங்கே, பிணப்பறையாய்ப், -பின்றை
ஒலித்தலும் உண்டாம்' என்று, உய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம், மாண்டார் மனம்.
(பாடல் 23 அதிகாரம்: யாக்கை நிலையாமை)
மன்றம் முழுவதும் முழங்க மணப்பறையாக விளங்கியவை, அன்று அவருக்கு அவ்விடத்திலே சாவுப் பறையாகப் பின்னர் ஒலித்தலும்கூட இவ்வுலகிலே நேர்வதுதான்.
இந்த உண்மையை உணர்ந்து மாட்சிமைப்பட்டவர்களுடைய மனமானது, தாம் பிறவித் துயரினின்றும் தப்பிப் போகும்படியான வழியையே உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.