இரு முறை கொட்டுவர்

இரு முறை கொட்டுவர்

ஒருவர் இறந்துபோன இடத்திற்குச் சென்று ஒருமுறை கொட்டுவார்கள்
Published on

சென்றே எறிய ஒருகால்; சிறுவரை

நின்றே எறிப, பறையினை; - நன்றேகாண்

முக்காலைக் கொட்டினுள், முடித், தீக் கொண் டெழுவர்

செத்தாரைச் சாவார் சுமந்து!

(பாடல் 24 அதிகாரம்: யாக்கை நிலையாமை

ஒருவர் இறந்துபோன இடத்திற்குச் சென்று ஒருமுறை கொட்டுவார்கள்; சிறிது நேரம் சும்மாவிருந்து மீண்டும் இரண்டாவது முறை கொட்டுவார்கள்; மூன்றாவது தடவை பறையினைக் கொட்டுவதற்குள் செத்துப் போனவர்களை இனிச் சாகப்போகிறவர்கள், துணியால் மூடித் தூக்கிச் சுமந்து கொண்டு, உயிரற்ற அந்த உடலை எரியிடுவதற்கு உரிய நெருப்பையும் எடுத்துக்கொண்டு கிளம்பிப் போவார்கள்.

இதுதான், யாக்கையின் நிலைமை, இதனை நன்றாக எண்ணிப் பாருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com