புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

துறவொழுக்கத்தை கைவிடேன்

அனைவரும் காணும்படியாக, ஊருக்குப் புறத்தேயுள்ள சுடுகாட்டிலே உதிர்ந்து சிதறிக்கிடக்கின்ற பல்லாகிய எலும்புகளைப் பார்த்து, உடலின் நிலையாமையாகிய உண்மை நிலையை அறிந்து, துறவறத்திலே ஒழுகிவருபவன் யான்.

News image
Updated On :8 பிப்ரவரி 2026, 12:17 pm

இணையதளச் செய்திப் பிரிவு

'முல்லை முகை, முறுவல், முத்து' என்று, இவைபிதற்றும்

கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ,

எல்லாருங் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க

பல்லென்பு கண்டொழுகு வேன்?

(பாடல் 45 அதிகாரம்: தூய்து அன்மை)

அனைவரும் காணும்படியாக, ஊருக்குப் புறத்தேயுள்ள சுடுகாட்டிலே உதிர்ந்து சிதறிக்கிடக்கின்ற பல்லாகிய எலும்புகளைப் பார்த்து, உடலின் நிலையாமையாகிய உண்மை நிலையை அறிந்து, துறவறத்திலே ஒழுகிவருபவன் யான்.

அப் பற்களின் தோற்றத்தை, 'முல்லை அரும்புகள்' என்றும், 'இளநகை' என்றும் 'முத்தெ'ன்றும், இன்னபடியெல்லாம் பிதற்றுகின்ற, நல்லற நூற்களைக் கல்லாத அற்ப மனிதர்களின் பேச்சுக்கள் என்னைக் கவலைப்படுத்துமாறு, யான் என் துறவு ஒழுக்கத்தைக் கைவிட்டு விடுவேனோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.