எல்லாம் சேர்ந்ததுதான் உடல்

குடரும், கொழுப்பும், இரத்தமும், எலும்பும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருக்கிறதான நரம்பும், தோலும், இவற்றின் இடையிடையே வைத்திருக்கின்ற தசையும் நிணமும் ஆகிய உடலின் இத்தகைய...
எல்லாம் சேர்ந்ததுதான் உடல்
Updated on
1 min read

குடரும், கொழுவும், குருதியும், என்பும்,

தொடரும் நரம்பொடு தோலும்,- இடையிடையே

வைத்த தடியும், வழும்புமாம், மற்றிவற்றுள்

எத்திறத்தாள், ஈர்ங்கோதை யாள்?

(பாடல் 46 அதிகாரம்: தூய்து அன்மை)

குடரும், கொழுப்பும், இரத்தமும், எலும்பும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருக்கிறதான நரம்பும், தோலும், இவற்றின் இடையிடையே வைத்திருக்கின்ற தசையும் நிணமும் ஆகிய உடலின் இத்தகைய பல்வேறு பகுதிகளுள், 'குளிர்ச்சியான தலைமாலையை உடைய பெண்' என்று சொல்லப்படுபவள்தான், எந்தப் பகுதியைச் சார்ந்தவளோ? 'தனித்தனியாகப் பார்த்தால் எல்லாம் அசுத்தமானவைகளாயிருக்கின்றவே? இவை சேர்ந்த பெண் என்பவள் மீது உண்மையறிந்தார் காமுற்று அலைவது அறிவீனம் அல்லவோ?' என்று சொல்லித் துறவை வற்புறுத்துவது இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com