தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வகுத்த பனம்பாரனார், வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல் லுலகம்' என்று பழந்தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கின்றார். அதையே தமிழ் இலக்கிய வரலாற்றில் லெமூரியாக் கண்டம்' என்பர். இவ்வாறு குறிப்பிடப் பெற்றுள்ள குமரிமுனைக்குத் தெற்கே இருந்த பெரும் நிலப்பரப்பைக் கடல் கோள் (சுனாமி) தன்னகத்தே கொண்டு விழுங்கிவிட்டது என்பர் ஆய்வாளர்கள்.
ஸ்காட் எலியட் என்பவர், தமிழ்நாடு லெமூரியாவில் இருந்தபோது எகிப்து நாடு நீருள் இருந்தது' என்கிறார். எனவே, எகிப்து தோன்றுவதற்கு முன்பே தமிழகம் தோன்றியிருக்க வேண்டும்.
எகிப்தின் தற்போதைய லக்ஸர் நகருக்கு அருகில் நைல் நதிக்கு மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதி', பழங்கால எகிப்தின் புதிய ராஜாங்கத்தைச் சேர்ந்த (கி.மு.16 முதல் கி.மு. 11-ஆம் நூற்றாண்டு வரை) ஃபாரோக்கள்', அவர்களுடைய பிரபுகளுக்காக உருவாக்கப்பட்ட 65 கல்லறைகள் இங்கே உள்ளன.
ரோமானியர்களின் காலத்தில் இந்தப் பகுதிகளுக்கு வந்தவர்கள் தங்களுடைய பெயரைக் கல்லறைச் சுவர்களில் எழுதிச் சென்றிருக்கக் கூடும். லோசான் பல்கலைக்கழகம் - இங்கோ ஸ்டராச்சும், தூர கிழக்கு ஆய்வுகளுக்கான பிரெஞ்சு நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் சார்லஸ் சுமித்தும் - மன்னர்களின் பள்ளத்தாக்கில் உள்ள ஆறு கல்லறைகளில் இந்திய மொழிகளின் சுமார் 80 எழுத்துப் பொறிப்புகளைக் கண்டறிந்தனர்.
தற்போது நடந்த ஆய்வில் 1, 2 , 6, 8, 9, 14 என்று இலக்கமிடப்பட்டுள்ள ஆறு கல்லறைகளில் 30 இந்திய எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. தமிழ், பிராகிருதம், காந்தாரி, சம்ஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. இந்த மொழிகளில் எழுத மூன்று விதமான எழுத்துவடிவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காந்தாரி மொழியை எழுத கரோஷ்டி என்ற எழுத்து வடிவமும், பிராகிருதம் மற்றும் சம்ஸ்கிருதத்தை எழுத பிராமி எழுத்துகளும், தமிழை எழுத தமிழ் பிராமியும் (தமிழி) பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கல்லறைகளில் கிடைத்த பெரும்பாலான எழுத்துப் பொறிப்புகள் தமிழைச் சார்ந்ததாகவே இருந்தன. முதலாம் எண் கல்லறையில் கிடைத்துள்ள 16 எழுத்துப் பொறிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை தமிழில் இருந்தன. இங்குள்ள பல கல்லறைகளில் கிடைக்கும் தமிழ் எழுத்துப் பொறிப்புகளில் சிகை கொற்றன்' என்ற வார்த்தை அதிக அளவில் காணப்படுகிறது. இந்தப் பெயர் எட்டு இடங்களில் காணப்படுகிறது.
முதலாவது கல்லறையில் சிகை கொற்றன் வந்தான், பார்த்தான்' என மூன்று முறை எழுதப்பட்டிருக்கிறது. கல்லறையின் நுழைவாயில் பகுதியில், எதிர் எதிராக இரண்டு இடங்களில் இந்த வார்த்தைகள் காணப்படுகின்றன. இரண்டாவது கல்லறையில் சிகை கொற்றன் என்ற பெயர் உள்ளது. ஆறாவது கல்லறையில் இரண்டு எழுத்துப் பொறிப்புகள் கிடைக்கின்றன. நுழை வாயிலுக்கு அருகில் இருக்கும் சுவரில் உயரத்தில் இவை எழுதப்பட்டிருக்கின்றன.
இதிலும் ஒன்று சிகைக் கொற்றன்' எழுதியதாக அறியப்படுகிறது. இந்தக் கல்லறையில் கிரேக்க எழுத்துகள் உள்ளே எழுதப்பட்டிருந்தாலும் அந்த அளவு உயரத்தில் வேறு யாரும் எழுத்துப் பொறிப்புகளைச் செய்யவில்லை. எட்டாவது கல்லறையில் கிடைக்கும் ஆறு எழுத்துப் பொறிப்புகளில், நான்கு தமிழில் உள்ளன. ஒன்பதாவது கல்லறையின் நுழைவாயில் பகுதியில், தமிழில் எழுத்துப் பொறிப்புகள் காணப்படுகின்றன. 14-ஆவது கல்லறையில் தமிழ் மொழியில் சிகைக் கொற்றன்' என்ற எழுத்துப் பொறிப்பு மட்டும் காணப்படுகிறது.
சிகைக் கொற்றன் வரும் போது/வந்ததால்/வந்து விட்டதால் பார்த்து விட்டான்' என்ற பொறிப்புக் காணப்படுகிறது. ஏற்கெனவே உள்ள கிரேக்க எழுத்துப் பொறிப்புகளுக்கு மேலே இருக்கும் வகையில் சிகை கொற்றன் தமிழ் எழுத்துகளைப் பொறித்திருக்கலாம். சிகை கொற்றன் தவிர, கோபன், வரத கண்டன், சாத்தன், கீரன் போன்ற பெயர்களும் காணக் கிடைக்கின்றன.
தமிழர்கள் தங்கள் கடல் செலவின்போது தத்தம் வழிபாட்டு முறைகளையும், குறியீடுகளையும், தாங்கள் சென்ற இடங்களில் காலூன்றச் செய்திருக்கலாம். 1931-ஆம் ஆண்டில் மிஸ்ஸிங் லிங்க்ஸ்' எனும் ஆங்கில வரலாற்று நூலை வடுவூர் கே.துரைசாமி அய்யங்கார் (நாவலாசிரியரும் கூட) வெளியிட்டார். அந்நூலில் பல்வேறு தலைப்புகளில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார்.
எகிப்தில் உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்கில்' உள்ள பிரமிடுகளில் உள்ள மம்மிகளில்' வைணவ சமயக் குறியீடுகள் காணப்படுகின்றன என்று புகைப்படச் சான்றுகளுடன் வெளியிட்டுள்ளார்.
தொடர்புடையது

ஜன நாயகன் படத்தை வெளியிட மாட்டோம்! தமிழ் ராக்கர்ஸ் அறிவிப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 05-04-2026
திரைப்படத் திறனாய்வுக்கு அறந்தை!

வரப்பெற்றோம் (16-03-2026)
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

