நரசிம்ம நாடகம்!
தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினம் (திருவாரூர் வழியாக) செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சாலியமங்கலம். இந்தக் கிராமத்தில் தஞ்சை நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்


தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினம் (திருவாரூர் வழியாக) செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சாலியமங்கலம். இந்தக் கிராமத்தில் தஞ்சை நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்கர் காலம் முதல் இடைவிடாமல் கடந்த 364 ஆண்டுகளாக ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி உற்சவமும், அதனையொட்டி தெலுங்கு மொழியில், "பக்தி ரச பாகவதமேளா' நாட்டிய, நாடகங்களும் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தியன்று மாலை 6 மணி அளவில் ஸ்ரீலஷ்மி நரசிம்ம சுவாமி பிராணப் பிரதிஷ்டை ஆராதனை வைபவம் நடத்தப்படுகிறது. தினசரி பூஜிக்கப்பட்டு வரும் ஸ்ரீ நரசிம்ம பிம்பத்திலிருந்து (அத்தி மரத்தில் செய்யப்பட்டது) குடத்தில் உள்ள நீருக்கு அந்தத் தெய்வீக சக்தி மாற்றப்படும். மூல பிம்பம் புது வண்ணங்களால் ஒளி விடும். பின் குடத்திலிருந்து பிம்பத்துக்குச் சக்தி மாற்றப்படுகிறது. சகஸ்ரநாம அர்ச்சனை, பூஜைகள், தீபாராதனைகள் போன்றவைகளுடன் நடக்கும் இந்த ""கண் திறக்கும்'' வைபவத்தைக் காணப் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பின்பு ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து கருட வாகனத்தில் பெருமாள், அக்ரஹாரத்தில் எழுந்தருள்வார். பெருமாளின் முன்பு இரவு முழுவதும் நடக்கும் நாடகத்தில் உச்சகட்டமாக மறுநாள் விடியற்காலையில் (இரவும் பகலும் கூடும் நேரம்) ஸ்ரீ நரசிம்ம அவதாரக் காட்சி நடைபெறுகிறது. நரசிம்ம பிம்பத்தை அணிந்து கொண்டு பக்தியுடன் நடத்தப்படும் இந்த அவதாரக் காட்சியை மிகவும் தத்ரூபமாக, கண்டோர் மெய்சிலிர்க்கும் வண்ணம் இன்றளவும் சாலியமங்கலத்தில் காணலாம்.
இவ்வாண்டு மே 7ம் தேதி நரசிம்ம ஜெயந்தியன்று இரவு 10 மணிக்கு பாகவதமேளா நாட்டிய நாடகத்தில் "பிரகலாத சரித்திரம்' நடத்தப்படுகிறது. மே 8ம் தேதி அதிகாலை 4 மணிக்கு, "ஸ்ரீ நரசிம்ம அவதாரம்.'
சாலியமங்கலம் செல்ல தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. பள்ளி, கல்லூரி விடுமுறையில் இருக்கும் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் அவசியம் அழைத்துக்கொண்டு இந்தப் பிரகலாத சரித்திரத்தைக் கண்டு களித்து ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் பேரருளுக்குப் பாத்திரராகலாம். மேலும் விவரங்களுக்கு, "சாலியமங்கலம் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம பாகவதமேள பக்த சமாஜம்' என்னும் அமைப்பைத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் : (95-4374) 239460, 9894937368.
படங்கள் : திருவையாறு சிவா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...