தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அடுத்திருப்பவர் யார்?

நிலையில்லா இவ்வுலகப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நிலையான மோட்ச பேரின்பத்தை உரிமையாக்கிக்கொள்ள விரும்பும் ஒருவன் செய்ய வேண்டியது என்ன?'' என்ற கேள்விக்கான பதிலை பைபிளில் லூக்கா நற்செய்தியில் கா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:06 am

பிலோமினா சந்தியநாதன்

நிலையில்லா இவ்வுலகப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நிலையான மோட்ச பேரின்பத்தை உரிமையாக்கிக்கொள்ள விரும்பும் ஒருவன் செய்ய வேண்டியது என்ன?'' என்ற கேள்விக்கான பதிலை பைபிளில் லூக்கா நற்செய்தியில் காண்கிறோம். ""உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன் மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக'' (லூக்கா10:27) என்ற இயேசுவிடம் "எனக்கு அடுத்திருப்பவர் யார்?' என்ற திருச்சட்ட வல்லுநர் ஒருவர் வினவினார். அப்போது இயேசு கூறிய உவமை பின்வருமாறு:

 ""ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப்போனார்கள். குரு ஒருவர் தற்செயலாக அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே úஸவியர் (அக்கால மேல்வர்க்கத்தைச் சார்ந்த யூத குடிமகன்) ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாக விலகிச் சென்றார்.

 ஆனால் அவ்வழியே பயணம் செய்து கொண்டிருந்த சமாரியர் (கீழ்சாதி யூதர்) ஒருவர் அவர் மீது பரிவு கொண்டு, அவரை அணுகி,காயங்களுக்கு மருந்திட்டு அவற்றைக் கட்டி தாம் பயணம் செய்த விலங்கின் மீது அவரை ஏற்றி ஒரு சாவடிக்குக் கொண்டு போய் அவரை கவனித்துக் கொண்டார். மறுநாள் இரு தெனாரியத்தை (உரோமை நாணயம்) எடுத்து சாவடிப் பொறுப்பாளிடம் கொடுத்து "இவரை கவனித்துக் கொள்ளும். இதற்கு மேல் செலவானால், நான் திரும்பி வரும்போது உம்க்குத் தருவேன்'' என்றார்.

 கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் "அடுத்திருப்பவர்' என உமக்குத் தோன்றுகிறது?'' என்று இயேசு கேட்டார். அதற்குத் திருச்சட்ட வல்லுநர் " அவருக்கு இரக்கம் காட்டியவரே' என்றார். அதற்கு இயேசு ""நீரும் போய் அவ்வாறே செய்வீர். அப்போது மீட்படைவீர்'' என்றார்.

 ஆம், வான் வீட்டு பேரின்பத்தை அடைய விரும்பும் எவரும் இறைவனை வழிபடுவதில் மட்டும் காலத்தைக் கழிப்பது சரியாகாது. தன்னை அடுத்திருப்பவருக்கும், துன்புறும் அயலாருக்கும், உறவினருக்கும் இயன்ற அளவில் உதவுதல் வேண்டும். மேற்கண்ட உவமையின் வழியாக இவ்வுண்மையை நமக்கு எடுத்துக் காட்டுகிறவர் இயேசு பெருமான். அல்லல்பட்டு, ஆற்றாது வழியில் கிடந்தவனை கண்டும் கல் மனம் படைத்த இருவர் கடந்துபோக, எள்ளப்பட்டு, இகழப்பட்ட குலத்தில் பிறந்த சமாரியர் அடிபட்டவருக்கு உதவினார். அவரைப் பின்பற்றுவோம். ஏழையர், கொடுமைப்படுவோரின் கண்ணீர் நம் கன்னங்களில் வழியட்டும். வையங்களின் காயங்களும், வருந்துவோரின் விம்மலும் நம் இதயக் கதவைத் தட்டும்போதும் நல்வாழ்வும், அமைதியும் நல்கிட வழிவகுப்போம். அதுவே நிலை வாழ்வு பெறுவதற்கான ஒரே வழியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.