தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பகிர்ந்து வாழ்வோம்!

ஓருந்தினரை உணவிட்டு உபசரித்துவிட்டு, மீதியை உண்பவனது நிலத்தில் விதைக்காமலேயே பயிர் விளையும். அவனது செல்வமும் பெருகும்'' என்று விருந்தோம்பலின் மாண்பைப் பற்றிக் கூறுகிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். இ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:25 am

பிலோமினா சந்தியநாதன்

ஓருந்தினரை உணவிட்டு உபசரித்துவிட்டு, மீதியை உண்பவனது நிலத்தில் விதைக்காமலேயே பயிர் விளையும். அவனது செல்வமும் பெருகும்'' என்று விருந்தோம்பலின் மாண்பைப் பற்றிக் கூறுகிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். இவ்வாறு விருந்தளிக்கும்போது யாரை உபசரிக்க வேண்டும், விருந்தின்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி பைபிளில் கூறப்பட்டிருக்கிறது.

""ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால் பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில் "இவருக்கு இடத்தைக் கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம் "நண்பரே முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும்போது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்''(லூக்கா: 14:8-10)

ஆம், தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர், தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.

மேலும் இயேசு கூறுகிறார்: ""நீர் விருந்தளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர், சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும்.

மாறாக நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை'' (லூக்கா: 14:12-14)

எனவே விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் தரும் அதே நேரத்தில் யாரை விருந்துக்கு அழைக்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும். உறவினர்களையும், நண்பர்களையும் உபசரித்து மகிழும் அதே வேளையில் பசியோடு தவிக்கும் வறியோரையும் நினைவில் இருத்தி, அனாதை இல்லங்கள், முதியோர் காப்பகங்களில் வாழ்வோருக்கும் உணவளித்து மகிழ்தல் வரவேற்கத்தக்கது.

ஏனெனில் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் செல்வம், அவர் நமக்கு அளித்துள்ள இலவசக் கொடை. கோடானு கோடி மக்களுக்குக் கிடைக்கப் பெறாத வசதியான, சுகபோக வாழ்வைக் கொடுத்திருக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக அயலாரோடு பகிர்ந்து வாழ்வோம்; வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.