போதேந்திரர் ஆராதனை மகோத்ஸவம்
நாம சங்கீர்த்தன மார்க்கத்தின் மூல புருஷர்களாகத் திகழ்ந்த மும்மூர்த்திகள் ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீதரவேங்கடேச ஐயாவாள், ஸ்ரீ வேங்கடராம ஸத்குரு ஸ்வாமிகள் ஆகியோர். இவர்களில் துறவியாக விளங்கியவ


நாம சங்கீர்த்தன மார்க்கத்தின் மூல புருஷர்களாகத் திகழ்ந்த மும்மூர்த்திகள் ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீதரவேங்கடேச ஐயாவாள், ஸ்ரீ வேங்கடராம ஸத்குரு ஸ்வாமிகள் ஆகியோர்.
இவர்களில் துறவியாக விளங்கியவர் போதேந்திர ஸ்வாமிகள். இவர் காஞ்சி காமகோடி மடத்தின் 59வது பீடாதிபதியாக விளங்கியவர். ""கிருத யுகத்தில் விஷ்ணுவைத் தியானிப்பதாலும், திரேதா யுகத்தில் யாகங்கள் செய்வதாலும், துவாபர யுகத்தில் அர்ச்சனையாலும் அடையப்படும் பரம்பொருளை, கலியுகத்தில் திருநாமங்களை உச்சரிப்பதால் அடைந்துவிடலாம்'' என்ற சித்தாந்தத்துக்கு ஏற்ப நாம கீர்த்தனப் பிரசாரம் செய்தவர் போதேந்திரர்.
"பகவந்நாம ரúஸôதயம்' முதலிய எட்டு கிரந்தங்களை எழுதி பக்தி மார்க்கத்தைக் காப்பாற்றினார். வாழ்நாள் முழுவதும் தினமும் லட்சத்து ஓராயிரம் ராம நாமத்தை இடைவிடாது ஜபித்தவர். ராம நாமத்தை மக்களுக்கும் உபதேசித்தவர். இவருடைய ராம நாம உபதேசத்தால், ஓர் அசுரனால் வாழ்வு இழந்த குடும்பப் பெண் ஒருத்தி நல்வாழ்வு பெற்றாள். அதுபோல், இவர் தந்த பிரசாதத்தை சாப்பிட்டு வாய்பேச இயலாத ஒருவன், பேசும் திறன் பெற்று பகவந் நாமத்தைச் சொல்லத் தொடங்கினான்.
நாம பிரசாரத்தை இடைவிடாது செய்யும் நோக்கத்தோடு தனக்குப் பிறகு மடாதிபதியாக தகுந்த நபரை நியமனம் செய்து பல்வேறு இடங்களுக்கும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார் போதேந்திரர்.
இதில் முக்கியமான அம்சம் சில இடங்களுக்கு ஸ்ரீதர ஐயாவாளுடன் சேர்ந்து நாம பிரசார யாத்திரை மேற்கொண்டார். இந்தக் காலகட்டத்தில்தான் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் இந்த இரு மகான்களையும் சந்தித்தார். இறுதியாக திருவிடைமருதூரில் சில காலம் தங்கிய போதேந்திரர், அருகில் உள்ள கோவிந்தபுரம் என்ற ஊரில் (கும்பகோணம் } ஆடுதுறை வழியில்) வீர சோழன் ஆற்றங்கரையில் ஜீவ சமாதி அடைந்தார்.
பிற்காலத்தில் காவிரிநதியில் மூழ்கிய ஸ்ரீபோதேந்திரரின் சமாதியைக் கண்டுபிடித்து சாஸ்வதமாக பிரதிஷ்டை செய்தார் மருதாநல்லூர் ஸ்ரீவேங்கடராம ஸத்குரு
சுவாமிகள்.
ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 319வது ஆண்டு ஆராதனை மகோத்ஸவம் கோவிந்தபுரத்தில் செப்.12ஆம் தேதி திங்கள்கிழமை பௌர்ணமி திதியில் தொடங்கியது.
செப்.24 அன்று அவரின் மகா ஆராதனையும், அன்றிரவு பஜனை மற்றும் வீதிவலமும் நடைபெறுகின்றன. மறுநாள் ஆஞ்சநேய உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறும்.
இந்த ஆராதனையில் கலந்துகொண்டு நாம சித்தாந்த நாயகராகிய ஸத்குருநாதரின் திருவருள் பெறுவோம்.
தகவல்கள் பெற: ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் டிரஸ்ட், கோவிந்தபுரம். 0435-2470620, 2940622
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...