பிறருக்காக...!
"உன்னிடம் இருப்பதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு' என்றார் இயேசு. ஒருவனிடம் இருப்பதில் அதிகமாக இருப்பது இரண்டுதான். 1. அன்பு 2. ஆன்மிகம் அல்லது செப உணர்வு. அன்பை ஒரு மனிதன் கொடுப்பதிலும் சில நிபந்தன


"உன்னிடம் இருப்பதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு' என்றார் இயேசு. ஒருவனிடம் இருப்பதில் அதிகமாக இருப்பது இரண்டுதான். 1. அன்பு 2. ஆன்மிகம் அல்லது செப உணர்வு. அன்பை ஒரு மனிதன் கொடுப்பதிலும் சில நிபந்தனைகள் இருக்கத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக திருமண பந்தத்தில் ஈடுபட்டுள்ள ஒருவன் தன் அன்பை மிகுதியாகத் தனது வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க இயலும். ஆகவே, தடையற்றது செபம் மட்டும்தான்.
செபத்தை ஒரு மனிதன் தேவை இருக்கின்ற இன்னொரு மனிதனுக்கு தாராள உணர்வுடன் வழங்க இயலும். ""எனக்காக தயவு செய்து ஜெபியுங்களேன்'' என்று சொல்லிச் செல்பவர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம். யாரென்றே தெரியாத போதும் அவர்களுக்காக நாம் ஜெபிக்கிறபோது வெற்றியடைந்தோர் மகிழ்கின்றனர்.
திருச்சபையின் தலைவரான எல்லாம் வல்ல தந்தையான இறைவனும் மகிழ்கிறார். நம் ஜெப உதவியை கேட்டவர்களுக்காக நாம் ஜெபிக்கிற போது நம்மைப் படைத்த இறைவன் நம்மை நினைத்து மகிழும் வாய்ப்பை நாம் வழங்குகிறோம்.
""நீ பெரிய புனிதரா?''
என்று மற்ற மனிதர்கள் நம்மை ஏளனம் செய்யக்கூடும். ஆனால் நம்மைப் படைத்த இறைவனோ நம்மைப் பார்த்து புன்முறுவலை சிந்துகிறார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் யார்யார் என்றே தெரியாத நிலையில் அவர்களுக்காக ஜெபிக்கிறபோது நம்மை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கிறார்.
புனிதர்களை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் நாம், மீளா வேதனைக்குள் சென்று விடக்கூடாது என்று யோசிக்கும் நாம், இந்த இடைநிலை ஆன்மாக்களுக்காக ஜெபிப்பதும் நம் கடமையே. ஒரு நாள் துன்ப நிலையிலிருந்து, நம் செப உதவியால் அவர்கள் விடுவிக்கப்படும்போது, நன்றி மறவாமல், நமக்காக அவர்கள், ஜெபிக்க மாட்டார்களா என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...