தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கோபம் வேண்டாம்!

கோபம் கொள்ளுதல் என்பதை நாம் மிகச் சிறிய தவறு என நினைக்கின்றோம். ஆனால் இறைவனின் பார்வையில் அது ஒருவனை தண்டனை தீர்ப்புக்கு உள்ளாக்கக் கூடிய அளவுக்குக் கொடிய பாவமாகும். இதனாலேயே பைபிளில் பின் வருமாறு கூ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:38 pm

பிலோமினா சந்தியநாதன்

கோபம் கொள்ளுதல் என்பதை நாம் மிகச் சிறிய தவறு என நினைக்கின்றோம். ஆனால் இறைவனின் பார்வையில் அது ஒருவனை தண்டனை தீர்ப்புக்கு உள்ளாக்கக் கூடிய அளவுக்குக் கொடிய பாவமாகும். இதனாலேயே பைபிளில் பின் வருமாறு கூறப்பட்டிருக்கிறது:

""நான் உங்களுக்கு சொல்கிறேன். தம் சகோதரர், சகோதரியிடம் சினம் கொள்கிறவர் தண்டனை தீர்ப்புக்கு ஆளாவார். தன் சகோதரனையோ, சகோதரியையோ "முட்டாளே' என்பவர் தலைமை சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார். "அறிவிலேயே' என்பவர் எரி நரகத்துக்கு ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையை பலி பீடத்தில் செலுத்த வரும்போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென்று அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவர்களிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின் வந்து உங்கள் காணிக்கையை செலுத்துங்கள்''.

ஆம், நம் ஆதிப் பெற்றோராகிய ஆதாம், ஏவாள் மக்களுள் மூத்தவனான காயின், தன் இளைய சகோதரனான ஆபேலைக் கொலை செய்தது அவன் மேல் கொண்ட கட்டுக்கடங்காத கோபத்தின் காரணமாக அன்றோ? காயின் தன் நிலத்தின் கனிகளைக் கடவுளுக்கு காணிக்கையாகப் படைத்தான். காயினின் காணிக்கைகளைவிட, ஆபேலின் காணிக்கைகளை மிகுந்த மன உவப்புடன் ஆண்டவர் ஏற்றுக் கொண்டதால், தன் சகோதரன் மேல் கடுஞ்சினங் கொண்ட காயின், அவனை வயல் வெளிக்கு அழைத்துச் சென்று கொலை செய்தான். எனவே ஆண்டவர் அவனுக்குத் தண்டனை அளித்தார். "நீ மண்ணில் பயிரிடும்போது, அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்' என்று சபித்தார்.

ஆம், சிறையில் தண்டனை பெற்று வாடும் கைதிகளிடம் அதற்கான காரணத்தைக் கேட்டறிந்தோமென்றால் பெரும் வியப்படைவோம். தம் சகோதரிகளிடமோ அல்லது நெருங்கிய உறவினர்களிடமோ கொண்ட மனத்தாங்கலோ அல்லது கோபமோ சிறியதொரு தீப்பொறி பெரு நெருப்பாக உருவாவதைப்போல், கடுஞ்சச்சரவாக மாறி, இறுதியில் கொலை செய்வதில் கொண்டு போய் விட்டுவிட்டது என்று கூறுவர்.

"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்'

என்னும் குறளுக்கேற்ப ஒழுக்க நெறியில் வாழ விரும்பும் எவரும் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் அந்தக் கோபம் அவரையே அழித்துவிடும்.

எனவே ஐம்புலன்களை அடக்கி ஆள நினைக்கும் எவரும் முதலில் கோபத்தை அடக்கப் பழக வேண்டும். கோபத்தை அடக்குவதற்கு யோகா, தியானம், இறை வழிபாடு போன்றவை பெரிதும் உதவுகின்றன. மனக்கட்டுப்பாடுடன் வாழும் எவரும் வாழ்வில் வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.