தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

நான் விரும்பும் நோன்பு...

உலகின் பல்வேறு மதங்களும் தம்மைப் பின்பற்றுவோரின் வாழ்வு செம்மையுற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனேயே செயல்படுகின்றன. வாழ்வு செம்மையுற்று, இறைவன் பாதத்தை ஒருவன் அடைய அவை வலியுறுத்தும் மூன்று முக்கிய வழ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:46 am

பிலோமினா சந்தியநாதன்

உலகின் பல்வேறு மதங்களும் தம்மைப் பின்பற்றுவோரின் வாழ்வு செம்மையுற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனேயே செயல்படுகின்றன. வாழ்வு செம்மையுற்று, இறைவன் பாதத்தை ஒருவன் அடைய அவை வலியுறுத்தும் மூன்று முக்கிய வழிமுறைகள் ஜெபம், தபம், தான தர்மம் ஆகியவை.

வாழ்நாள் முழுவதுமே ஒருவன் ஜெப,தப, தர்ம காரியங்களில் செலவிட அழைக்கப்பட்டாலும், மக்களை நெறிப்படுத்துவதற்காக குறிப்பிட்ட சில காலங்களில் நோன்பு, விரதம் அல்லது தவ முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென எல்லா மதங்களுமே வலியுறுத்துகின்றன. கிறிஸ்துவ மதம், "விபூதி புதனை' (அள்ட் ரங்க்ய்ங்ள்க்ஹஹ்) அடுத்த நாற்பது நாட்களை தவக்காலம் என அழைக்கிறது. மக்கள் அந்நாட்களை ஜெபத்திலும், தவத்திலும் செலவிட வேண்டும் என வலியுறுத்துகிறது.

விபூதி புதனன்று குருவானவர், ஒவ்வொருவனது நெற்றியிலும் சாம்பலைப் பூசி "மனிதனே, நீ மன்னனாக இருக்கிறாய். மண்ணுக்கே திரும்புவாய். எனவே மனம் மாறிவிடு' என்று கூறி நிலையாமையை முன்னிறுத்தி நோன்பிருக்குமாறு அழைப்பு விடுக்கிறார். நோன்பு என்பது என்ன என்பது பற்றியும் பைபிளில் விளக்கம் கூறப்பட்டிருக்கிறது.

""சாக்கு உடையையும், சாம்பலையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு. அப்போது இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்'' (எசயா 58: 5,7,10).

மேலும் தர்மம் செய்வதையும், இறை வேண்டுதல் செய்வதையும் வெளியே தெரியுமாறு விளம்பரப்படுத்துவதால் எவ்வித பயனுமில்லை. அது இறைவனுக்கு உகந்தது ஆகாது என்பதையும் கீழ்வரும் பைபிள் வசனங்கள் நமக்கு தெளிவுபட உணர்த்துகின்றன.

""நீங்கள் தர்மம் செய்யும்போது உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்கு தெரியாதிருக்கட்டும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு கைம்மாறு அளிப்பார்'' (மத்தேயு 6;3).

""நீங்கள் நோன்பு இருக்கும்போது முக வாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்று அவ்வாறு செய்ய வேண்டாம். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து முகத்தைக் கழுவுங்கள். அப்போது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்கு தெரியாது. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்''(மத்தேயு 6:16-18).

எனவே நோன்பு என்பது ஆண்டவனுக்கும் நமக்கும் உள்ள உறவைப் புதுப்பித்தலே என்பதை உணர்ந்திடுவோம். ஆரவாரமின்றி தான தர்மங்கள் செய்து, தவக் காலத்தை அர்த்த முள்ளதாக்கி இறைவன் பால் மனம் உயர வழிவகுப்போம். இறைவனின் மலரடி சேர்ந்திட அதுவே ஒரே வழி என உணர்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.