திறந்த வெளியில் தென்முகக் கடவுள்
சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் பாலாற்றின் கரையில் இயற்கையழகு மிகுந்த பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது கனகாம்பிகை சமேத கைலாசநாதர் திருக்கோயில்.


சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் பாலாற்றின் கரையில் இயற்கையழகு மிகுந்த பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது கனகாம்பிகை சமேத கைலாசநாதர் திருக்கோயில். வரலாற்று சிறப்பு மிக்க இந்த பல்லவர் காலத்து கோயில் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெருமை உடையது. இங்கு கம்பீரமான பெரிய உருவில் கைலாச நாதரும், ஐந்தடி உயரத்தில் நின்ற கோலத்தில் அம்பிகையும் காட்சி தருகிறார்கள். வித்தியாசமான விநாயகப் பெருமானையும், சண்டிகேஸ்வரர், நவகிரக சந்நிதியையும் இத்திருக்கோயிலில் தரிசிக்கலாம்.
காலத்தினால் சிதிலமடைந்த இத்திருக்கோயில் சீரமைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் குடமுழுக்கு நடைபெற்றது. ஆனால் நிறைவேறவேண்டிய பணிகள் இன்னும் மீதமுள்ளன. ஆலயத்திற்கு வெளியே ஆற்றங்கரையில் பீடத்துடன் சுமார் ஒன்பதரை அடி உயரத்தில் பெரிய தட்சிணாமூர்த்தி அழகுற பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். தற்போது திறந்த வெளியில் உள்ள இந்த சந்நிதிக்கு மேற்கூரையுடன் மண்டபம் அமைக்க வேண்டிய பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தகவலுக்கு: 97890 56615.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...