தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பெரிய வெள்ளி

கிறிஸ்துவர்கள் கொண்டாடும் திருவிழாக்களில் ஈஸ்டர் பண்டிகை முக்கியமானதொன்றாகும்.

News image
Updated On :3 ஏப்ரல் 2014, 12:16 pm

பிலோமினா சந்தியநாதன்

கிறிஸ்துவர்கள் கொண்டாடும் திருவிழாக்களில் ஈஸ்டர் பண்டிகை முக்கியமானதொன்றாகும். ஈஸ்டர் அல்லது உயிர்ப்புப் பெருவிழாவுக்கு முந்தைய நாற்பது நாட்களை தவக்காலம் என்று கிறிஸ்துவர்கள் அழைக்கிறார்கள். இந்நாட்கள் செபத்திலும் தவத்திலும், தானதர்மத்திலும் செலவழிக்கப்படுகிறது.

ஈஸ்டருக்கு முந்தைய வாரம்தான் புனித வாரம் என்று அழைக்கப்படுகிறது. புனித வாரத்தின் வியாழன், பெரிய வியாழன் எனவும், வெள்ளிக்கிழமை பெரிய வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. அந்த வாரத்தின் இறுதி நாளான ஞாயிறு ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

பெரிய வெள்ளி இயேசு சிலுவையில் உயிர் துறந்த நாளாகும். மனிதரின் மீட்புக்காக இறை மகனே மனித உருவெடுத்து சிலுவைச் சாவுக்கு தம்மை உட்படுத்திக் கொண்ட நாளாகும். அன்றைய ஆளும் வர்க்கத்தினரால் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், இயேசு சிலுவையைச் சுமந்து கொண்டு கல்வாரி என்று அழைக்கப்பட்ட மலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிலுவையில் அறையப்பட்டு மரணத்துக்கு உட்படுத்தப்பட்டார்.

இயேசுநாதரின் பாடுகளின் பதினான்கு நிலைகள் ஒவ்வொரு தவக்கால வெள்ளிக்கிழமைகளிலும் ஆலயங்களில் நடைபெறும் சிலுவைப்பாதை என்னும் வழிபாட்டின்போது தியானிக்கப்படுகின்றன.

புனித வெள்ளியன்று நடைபெறும் சிலுவைப்பாதைக்குப் பின்னர் மூன்று நாட்களுக்கு கோயிலில் எந்த வழிபாடும் நடைபெறாது.

கிறிஸ்து மூன்று நாட்கள் கல்லறையில் புதையுண்டிருந்ததை நினைவுகூரும் விதமாகத்தான் இவ்வாறு நடைபெறுகிறது.

கல்லறையில் புதைக்கப்பட்ட இயேசு மூன்றாம் நாள் மாட்சிமையுடன் உயிர் பெற்று எழுந்தார். இந்த நிகழ்ச்சியைத்தான் சனிக்கிழமையன்று இரவு பன்னிரண்டு மணியளவில் கிறிஸ்துவ ஆலயங்களில் மிகுந்த விமரிசையோடு வழிபாடுகளாக நடத்துகிறார்கள். தீயசக்திகளை எதிர்த்து வெற்றி கண்டு, ஒளியான இறைவன் உயிர்த்தெழுந்தார் என்பதை நினைவூட்டும் விதமாக நெருப்பு, தண்ணீர் ஆகியவை மந்திரிக்கப்படுகின்றன.

ஆம்.. சூதும், வாதும் வெற்றி பெறுவதுபோல் தோன்றினாலும் இறுதியில் ஒளிப்பிழம்பான இறைவனுக்குத்தான் வெற்றி. நல்லோர்களின் துன்பமும் வேதனையும் ஒருபோதும் வீண்போவதில்லை. இதுவே ஈஸ்டர் பெருநாள் நமக்கு உணர்த்தும் உண்மை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.