உண்மையான விடுதலை!
ஆகஸ்ட் 15 ஆம் நாள் நம் நாட்டின் விடுதலைப் பெருநாள் அன்று கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள்


ஆகஸ்ட் 15 ஆம் நாள் நம் நாட்டின் விடுதலைப் பெருநாள் அன்று கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள் ஒரு மாபெரும் விழாவையும் இதோடு இணைத்துக் கொண்டாடுகிறார்கள். ஆம், அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாதான் அது. இறைவனின் மனிதாவதாரத்தின்போது, அவரது உடலைத் தாங்கும் பேறுபெற்ற அன்னையின் உடலை மண்ணோடு மண்ணாக அழிய விடவில்லை இறைவன். அவரது உடலானது ஆன்மாவோடு விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு மரியா விண்ணக மண்ணக அரசியாக முடிசூடப்பட்டு இறைவனின் அருகாமையில் அமரும் பேற்றினையும் பெற்றிருக்கிறாள்.
இப்பெருவிழா கீழ்த்திசை நாடுகளில் கி.பி. 600 இலும் மேல்திசை நாடுகளில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இருந்தும் கொண்டாடப்பட்டு வந்தது. காலம் காலமாக மரியாவின் விண்ணேற்பினை மக்கள் நம்பி வந்தபோதிலும் 1950 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் நாளன்றுதான் இவ்விழாவை, திருத்தந்தை 12 ஆம் பயஸ் அவர்கள் விசுவாச சத்தியமாக
அறிவித்தார்.
ஒரு கன்னியாக இறைமன்றாட்டில் ஈடுபட்டிருந்த அன்னை மரியாவிடம் வானதூதர் கபிரியேல் தோன்றி, "அருள் மிகப் பெற்றவரே, நீர் கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவர் உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது' என்று கூறினார். "இது எப்படி நிகழும்? நான் கன்னியாயிற்றே' என்று கேட்ட மரியாவிடம் "தூய ஆவியின் வல்லமையால் நீர் கருவுற்று மகனைப் பெறுவீர். அதனால் அது இறை
மகன் எனப்படும்' என்று கூறினார். "இதோ ஆண்டவரின் அடிமை! எனக்கூறி இறை சித்தத்திற்குப் பணிந்தார். கடவுளின் திட்டத்தை ஏற்றுக் கொண்டார். (லுக்கா 1:28-38)
இன்று சுதந்திரம் என்பது அதனைப் பெற போராடிய தியாகிகளின் எண்ணத்திலிருந்து வேறுபட்டு அதனைப் பெற போராடிய தியாகிகளின் எண்ணத்திலிருந்து வேறுபட்டு மாற்று மனிதனின் எண்ணத்தில் எழத் தொடங்கியுள்ளது.
கடவுளின் திட்டத்திற்கு அடிபணியாமல், சமுதாய நலனை மனதில் கொள்ளாமல் தன்னலம் ஒன்றே குறிக்கோளாக வாழும் மக்கள் அன்னை மரியாவின் வாழ்வினின்று கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?
பாவத்தினின்று முடிவில்லாத சுதந்திரம் பெற காரணமான இயேசு மீட்பரைப் பெற்றுத் தந்த மரியாளைப் போன்று, இறை சித்தத்திற்கு அடிபணிந்து, நாம் மட்டுமன்று, நம் சகோதரர்களும் சுதந்திரமாக வாழ தேவையான நற்பண்புகள், சொல், செயல், எண்ணங்களை வளர்த்து, அதன்மூலம் இப்பூமியை பூலோக சொர்க்கமாக, சுதந்திரப் பொன்னாடாக மாற்றிட வழிவகுப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...