திருமீயச்சூர் ஆலயங்கள்!
மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் பேரளத்திலிருந்து மேற்கே 2 கி. மி. தூரத்தில் உள்ளது காவிரித் தென்கரைத் தலங்களில்


மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் பேரளத்திலிருந்து மேற்கே 2 கி. மி. தூரத்தில் உள்ளது காவிரித் தென்கரைத் தலங்களில் 56, 57வது தலங்களாகப் போற்றப் பெறும் திருமீயச்சூர், மற்றும் திருமீயச்சூர் இளங்கோயில். ஒரே ஆலயத்தில் விளங்கும் இவ்விரு திருத்தலங்களையும் முறையே திருஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசரும் பாடியுள்ளார்கள். அகிலத்தையே தன் அருளாட்சியில் காத்தருளும் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் அனைத்து சக்திகளையும் ஒருங்கே கொண்ட ஓர் அற்புதத் திருத்தலமாகும்.
சூரியன் இத்தலத்திற்கு வந்து மேகநாதரை வழிபட்டு கருமை நீங்கிச் செவ்வொளிபெற்று இன்புற்றான் என்பது தலபுராண வரலாறு. காளிதேவி, ஸ்ரீ மகாலட்சுமித் தாயார், ஸ்ரீ ஹயக்ரீவர், அகஸ்திய பெருமான் மற்றும் சந்திரன், அக்னி, எமன், தேவர்கள் ஆகியோர்களால் வழிபடப்பெற்ற தலம். நவக்கிரக வழிபாட்டிற்கு முன்பே தோன்றி சகல தோஷங்களையும் நீக்கியருளும் பன்னிரு நாகர்கள், தம்பதிகளின் இணக்கத்தை வலியுறுத்தும் ஸ்ரீ சேஷத்ரபுராணேஸ்வரர், கையில் கிளியுடன் காட்சிதந்தருளும் ஸ்ரீ துர்கை ஆகியோர் அமைந்துள்ள அற்புதத்தலம். இத்தலத்தில் ஆயுள் நீட்டிக்க ஸ்ரீ மேகநாதருக்கு தினசரி பிரண்டை சாத நைவேத்யம் நடைபெறுவது சிறப்பு. நான்கு வேதங்களுக்கும் இணையான மந்திரம் எனப் போற்றப்படும் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் உருவானது இத்தலத்தில்தான்!
இத்தலத்தில் மூலவர் சுயம்பு லிங்கமாக அருள்மிகு மேகநாதர், அம்மன் செüந்தர நாயகி, லலிதாம்பிகை என்ற திருநாமங்களுடனும், இளங்கோயிலில் இறைவன் அருள்மிகு சகலபுவனேசுவரர், இறைவி மேகலாம்பாள் என்ற திருநாமங்களுடனும் வீற்றிருந்து அருள்புரிகிறார்கள். இத்தலத்தில் உள்ள கோஷ்டத்தில் உள்ள கல்யாண சுந்தரரை மணமாகாத பெண்கள் பிரார்த்தனை செய்துகொண்டு மாலை சாற்றி அர்ச்சித்து வழிபட்டால் விரைவில் திருமணம் நிறைவேறப் பெறுவர்.
ஸ்ரீ மேகநாதர் கோயில் இராஜேந்திர சோழன் செம்பியன்மாதேவி முதலிய சோழர் காலத் திருப்பணியைப் பெற்ற பெருஞ் சிறப்புடையதாகும். வேளாக்குறிச்சி ஆதினத்தின் கீழ் செயல்படும் இவ்வாலயங்களில் 2000 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது இத்திருத்தலத்தில் 2012 ஆம் ஆண்டு திருப்பணி தொடங்கப்பெற்று நடைபெற்றுவருகிறது. இத்திருப்பணியில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று பலன்பெறலாம். தகவல்களுக்கு: 9443113025/ 9840053289.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...