நல்லதொரு குடும்பம்
குடும்பத்தின் மாண்பை மனதில்கொண்டே கத்தோலிக்கத் திருச்சபை கிறிஸ்துமஸýக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமையில்


குடும்பத்தின் மாண்பை மனதில்கொண்டே கத்தோலிக்கத் திருச்சபை கிறிஸ்துமஸýக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமையில் திருக்குடும்பப் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. அன்னை மரியாவும், புனித யோசேப்பும் இணைந்தே இயேசுவை நல்லதொரு மகனாக வளர்த்து உலக மீட்பராக உருவாக்கினர். எனவே இக்குடும்பமே திருக்குடும்பம் என அழைக்கப்படுகிறது.
பிள்ளைகள் தம் பெற்றோர்பால் கொண்ட கடமையைப் பற்றி பைபிளில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. "தந்தையரை மதிப்போர் பாவங்களுக்கு கழுவாய் தேடிக் கொள்கின்றனர். தந்தையரை மதிப்போர் நீடு வாழ்வர். தந்தையின் ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலைநாட்டும். உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி. நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே. (சீராக் 3:3-13).
அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர். தாயின் சாபம் பிள்ளைகளின் குடும்பங்களை வேரோடு பெயர்த்தெறிந்துவிடும். அன்னையருக்கு சினமூட்டுவோர் ஆண்டவரால் சபிக்கப்படுவோர். (சீராக் 3:4,9,16) உன் தாயின் பேறுகாலத் துன்பத்தை மறவாதே. அவர்கள் உன்னைப் பெற்றெடுத்தார்கள். அதற்கு ஈடாக உன்னால் எதையும் செய்ய முடியாது என்பதை நினைவில் இருத்து. (சீராக் 7:27,28)
பெற்றோரும் தம் பிள்ளைகளிடம் அன்பும், பரிவும் காட்ட வேண்டும் என்பதும் பைபிளில் கூறப்பட்டுள்ளது. பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனம் தளர்ந்து போவார்கள் (கொலோசையர் 3:21).
கணவரும், மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு நடத்தலே, திருக்குடும்பத்தைப் பின்பற்றும் வழியாகும். "திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள்' (கொலோசையர் 3:18,19).
நமது குடும்பங்களில், நம் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்புகளை, கடமைகளை உணர்ந்து செயல்பட்டால் ஒரு நல்ல சமுதாயம் உருவாவதற்கு துணை நிற்போம் என்பதில் சந்தேகமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...