கீழப்பழுவூர் ஆலந்துறையார் ஆலயம்
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறப்புடைய தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுவது கீழப்பழுவூர்,


மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறப்புடைய தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுவது கீழப்பழுவூர், அருள்மிகு அருந்தவ நாயகி சமேத ஸ்ரீ ஆலந்துறையார் திருக்கோயிலாகும்! ஆலமரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்குவதால் (பழு என்றால் ஆல்) பழுவூர் என வழங்கப்படுகின்றது. தேவாரம் பதிகம் பெற்ற காவிரிக்கு வடகரையில் உள்ள 55 ஆவது திருத்தலமாகப் போற்றப்படும் இக்கோயில் தஞ்சாவூரிலிருந்து 30 கி.மீ. தூரத்திலும் அரியலூரிலிருந்து தெற்கே 11 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
இவ்வாலயத்திலுள்ள மூர்த்தங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை. கயமுகாசூரனை அழித்த மகிழ்ச்சியில் ஆடிய கோலத்தில் உள்ள நர்த்தன விநாயகரும் ஊசி முனையில் தவம் செய்யும் அம்பிகையின் கோலமும் சக்தி வாய்ந்த கிழக்கு நோக்கிய கல்யாண துர்க்கை சந்நிதியும் பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டியவை. சிறிய கோயிலாக இருந்தாலும் சோழர் வரலாற்றுடன் தொடர்பு கொண்ட பழுவூரில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சோழமன்னர்கள் பெருந் தொண்டு செய்துள்ளனர். அதேபோன்று பழுவேட்டரையர் என்று அழைக்கப்படும் குறுநில மன்னர்களும் இக்கோயிலுக்கு பல சிறப்புகள் செய்துள்ளனர்.
தாயின் சாபம் பெற்றவர்கள் இத்தலத்து ஈசனை பூஜித்தால் சாபம் நீங்கும் எனவும் கல்யாண துர்க்கையை வணங்கினால் திருமணத்தடை விலகும் எனவும் தட்சிணாமூர்த்தியை பூஜித்தால் கல்வி, செல்வம் பெருகும் எனவும் இத்தலத்தின் சிறப்புகளாக சொல்லப்படுகின்றன.
பக்தர்கள், கிராம மக்கள் உதவியுடனும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஒத்துழைப்புடன் திருஞானசம்பந்தர் அறநெறி வாரவழிபாட்டு அறக்கட்டளையின் பெருமுயற்சியுடன் ராஜகோபுரம் உள்ளிட்ட திருப்பணி வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன.
அதனையொட்டி, மகா கும்பாபிஷேகம், டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்வைபவத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெறலாம்.
தொடர்புக்கு: 94892 48219.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...