தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

விண்ணரசின் திறவுகோல்!

உலகெங்கும் பரவியுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்களின் தலைவராக விளங்குபவர் போப்பாண்டவர்.

News image
Updated On :14 மார்ச் 2014, 7:16 am

பிலோமினா சந்தியநாதன்

உலகெங்கும் பரவியுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்களின் தலைவராக விளங்குபவர் போப்பாண்டவர்.

இயேசுகிறிஸ்துவின் முக்கிய சீடர்களாக விளங்கிய பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனித பேதுருவையே (இராயப்பர்), தாம் நிறுவிய திருச்சபையின் தலைவராக நியமித்தார். ""நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு (பாறை); இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடை செய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்'' என்றார் இயேசுகிறிஸ்து. (மத்தேயு 16:18,19)

இதனாலேயே புனித பேதுருவின் உருவமானது கையில் திறவுகோல்களை ஏந்தியவண்ணம் சித்திரிக்கப்படுகிறது. பேதுருவின் வழிவந்த திருப்பணியாளர்களே போப்பாண்டவர்கள் என அழைக்கப்படுகின்றனர். இப்போது போப்பாண்டவராக விளங்குபவர் திருத்தந்தை பிரான்ஸிஸ்.

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பீடமாக விளங்குவது ரோம் நகரத்தில் உள்ள வட்டிகான் ஆகும். அங்கே உள்ள புனித பீட்டர் பேராலயத்தில்தான் பேதுருவின் (பீட்டர்) கல்லறையும் உள்ளது.

புனித பேதுருவை இயேசு தேர்ந்துகொண்டபோது, அவர் ஒரு சாதாரண மீனவர்தான். இயேசுவை உரோமின் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டி விசாரணைக்குட்படுத்தியபோது, மூன்று முறை இயேசுவை யாரென்றே தேரியாது என்று கூறி மறுதலித்தவர்தான் பேதுரு.

இப்படிப் பலவீனமாக இருந்த ஒரு மனிதனைத்தான் இயேசு தனது திருச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுத்து, "உன் பெயர் பாறை (பேதுரு)' என்று கூறி மிகப் பெரும் பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்தார்.

ஒரு மனிதனிடம் உள்ள குற்றங்குறைகள் இறைவனுக்கு ஏற்புடையவனாவதற்குத் தடைக்கற்களாக இராது என்பதையே, பேதுருவின் வாழ்க்கை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இயேசுவை மறுதலித்த குற்றத்துக்காக கண்ணீர்விட்டு அழுது, மனம் வருந்தியதால் உயரிய நிலைக்கு உயர்த்தப்பட்ட பேதுருவைப் போல நாமும் மனித பலவீனத்தின் காரணமாகத் தவறுகள் செய்ய நேரிட்டாலும், மனம் வருந்தி, நம்மைத் திருத்திக்கொண்டோமேயானால் இறைவனின் கரம் நம்மை வழிநடத்தி, அரவணைத்துக் காத்திடும் என்பதில் ஐயமேயில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.