சாயமங்கலத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா!
தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் ஆண்டுதோறும் ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி உற்சவமும் அதனையொட்டி பாகவதமேளா நாட்டிய நாடகங்களும் நடைபெற்று வருகின்றன.


தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் ஆண்டுதோறும் ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி உற்சவமும் அதனையொட்டி பாகவதமேளா நாட்டிய நாடகங்களும் நடைபெற்று வருகின்றன.
தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சம்பிரதாயம், இன்றளவும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவது ஆச்சரியம்! இதில், பிரகலாத சரித்திரம் நாட்டிய நாடகத்திற்கென உபயோகத்தில் உள்ள அத்தி மரத்தினாலான விநாயகப்பெருமான் மற்றும் நரசிம்ம முகபடாம் (முகமூடி) தினசரி வழிபாட்டிலும் இடம்பெற்றுள்ளது. பிரகலாத சரித்திரம் நாடகத்தின்போது விநாயகர் மற்றும் நரசிம்மர் வேடம் தரிப்பவர்கள் இந்த முகமூடியை அணிந்து கொண்டு நடிப்பர். இவ்வாறான நாடகம் நடத்தும் பாணி, மெலட்டூர், தேப்பெருமா நல்லூர் போன்ற ஊர்களிலும் வழக்கத்தில் உள்ளது.
சாலியமங்கலத்தில் இவ்வாண்டு, மே 13 ஆம் தேதி நரசிம்ம ஜெயந்தியன்று ஸ்ரீலெட்சுமி நரசிம்ம பிம்பத்திற்கு ப்ராண பிரதிஷ்டை ஆராதனையும் தொடர்ந்து அன்று இரவு முழுவதும் நடைபெறும் நாடகத்தின் உச்சகட்டமாக செய்யப்படுகிறது. மே 14 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு, இந்த நரசிம்ம பிம்பத்துடன் நரசிம்ம அவதாரக் காட்சியும் நடைபெறுகிறது.
தஞ்சை - நாகப்பட்டினம் செல்லும் சாலையில் தஞ்சையிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது சாலியமங்கலம்.
தொடர்புக்கு: 98949 37368 / 04374- 239460.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...