ராமர் தீர்த்த கடன்!
கானக வாழ்க்கையை மேற்கொண்டிருந்த ராமபிரானுக்கு தனது தந்தை தசரதன், தந்தையின் நண்பர் ஜடாயு ஆகியோர்களின் மரணம் வெகுவாகப் பாதித்து இருந்தது. இருவருக்கும் மகனாகவே இருந்து இருவரையும்


கானக வாழ்க்கையை மேற்கொண்டிருந்த ராமபிரானுக்கு தனது தந்தை தசரதன், தந்தையின் நண்பர் ஜடாயு ஆகியோர்களின் மரணம் வெகுவாகப் பாதித்து இருந்தது. இருவருக்கும் மகனாகவே இருந்து இருவரையும் முன்னோர்கள் வாழும் பிதுர்லோகம் எனப்படும் உலகத்தில் அவர்களின் முன்னோர்களுடன் சேர்க்க நினைத்தார்.
சிவபெருமானின் அருளாசியுடன் அவரது வழிகாட்டலின்படி மந்தாரவனம் என்னும் காட்டில் ஓடும் அரிசிலாறு என்னும் நதிக்கரையில் தேகசுத்தி, மனோசுத்தி ஆகியவற்றை முடித்துக்கொண்டு ஜப தப வேள்வி செய்து முறைப்படி பிதுர்க்காரியங்கள் செய்ய சுத்த சாத உருண்டைகள் நான்கு பிடித்து வைக்க அவை உதிர்ந்து கொண்டே இருந்தன. ராமர் விநாயகரை வேண்ட அவர் முன்னின்று அனுமதி தர, பிண்ட உருண்டைகள் உடையாமல் நின்றன. அவற்றை எடுத்துச் சென்று அரிசிலாற்றில் கரைக்க நினைக்கையில் அந்த நான்கு வெண் சாத உருண்டைகளும் லிங்கங்களாக மாறின. அதோடு தசரதனுக்கும் ஜடாயுவுக்கும் முக்தி கிடைத்தது. அவ்வாறு முக்தி கிடைக்கக் காரணமாய் அமைந்த நாள் புரட்டாசி மகாளய அமாவாசை தினம் எனப்படுகிறது.
ராமர் தன் முன்னோர் கடன் தீர்த்த இத்தலம், தில தர்ப்பணப்புரி அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயிலாகும். திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் பூந்தோட்டம் என்னும் இடத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பித்ரு தோஷ நிவர்த்தி தலமாக கருதப்படும் இத்தலத்தில் மகாளய அமாவாசை தினத்தில் (23.9.14) தில தர்ப்பணம் செய்து பித்ருக்கள் ஆசியைப் பெறலாம்.
தகவல்களுக்கு : 94423 90299.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...